Home /News /sports /

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்த மலிங்கா!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்த மலிங்கா!

லசித் மலிங்கா.

லசித் மலிங்கா.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வங்கதேசத்துக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா. 35 வயதான மலிங்கா சிறப்பான பந்து வீச்சால் எதிரணியை திணறடிக்க கூடியவர். மலிங்கா 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு அறிவிக்கவில்லை.

Also Read : பிசிசிஐ-யின் அட்டகாசமான ஐடியாவை ஏற்றது ஐசிசி...! கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றம்

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன் மலிங்கா ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.

“வங்கதேச அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக மலிங்கா என்னிடம் கூறினார். ஆனால் அணியின் தேர்வு குழுவினருடன் அவர் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது“ என கருணாரத்னே கூறியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின் மலிங்கா நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளதாகவும் கிரிக்கெட் பயிற்சியாளராக அவர் பணியினைதொடர முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Also Read : ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறும் லஸித் மலிங்கா?

Also Read : இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு! முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பினர்

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: Lasith Malinga

அடுத்த செய்தி