இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா விரைவில் ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா. 35 வயதான மலிங்கா சிறப்பான பந்து வீச்சால் எதிரணியை திணறடிக்க கூடியவர். மலிங்கா 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
வங்கதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்தத் தொடருடன் ஓய்வு பெற மலிங்கா முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்பின் இலங்கையில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளார். அதற்காக அங்கு வீடு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகக் கோப்பைத் தெடார் முடிந்த உடன் மலிங்கா நேராக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஓய்வுக்கு பின் அவர் பயிற்சியாளர் பணியை தொடங்க உள்ளதாக தெரிகிறது. வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க அவர் விரைவில் இலங்கை வர உள்ளார்.
Also Read : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...தோனி இல்லை...!
Also Read : 15 நாட்களில் 5 தங்கப் பதங்கள்... 19 வயது இளம் வீராங்கனை ஹீமா தாஸ் அசத்தல்
Also Watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lasith Malinga