Home /News /sports /

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவை மாற்றிய லசித் மலிங்கா..!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவை மாற்றிய லசித் மலிங்கா..!

மலிங்கா

மலிங்கா

டி20 போட்டியில் மலிங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பாரா என்பது குறித்து இன்னும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

  • News18
  • Last Updated :
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னனி வீரர்களுள் ஒருவரான லசித் மலிங்கா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.

    அடுத்த ஆண்டு 20-20 உலகக் கோப்பை உடன் ஓய்வு பெற விரும்புவதாக முன்னர் மலிங்கா தெரிவித்திருந்தார். ஆனால், தன்னால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்பான பங்களிப்பைத் தர முடியும் என்பதால் ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாகத் தற்போது அறிவித்துள்ளார்.

    டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு மலிங்கா அளித்த பேட்டியில், “டி20 என்பதில் நான்கு ஓவர்கள் எனக்கானது. என்னுடைய திறமைகளை ஒரு பந்துவீச்சாளராக என்னால் நிருபிக்கமுடியும். ஒரு கேப்டனாக என்றால் பல டி20 போட்டிகளை விளையாடிய அனுபவம் இருப்பதால் என்னால் கேப்டனாவும் சாதிக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    டி20 போட்டியில் மலிங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பாரா என்பது குறித்து இன்னும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    கேப்டன் பதவி குறித்து மலிங்கா பேசுகையில், “இலங்கை கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு என்னை கேப்டனாக விளையாட வேண்டும் என்றே விரும்புகிறது. ஆனால், சூழ்நிலையைப் பொறுத்தது கேப்டன் பதவி” என்றுள்ளார்.

    மேலும் பார்க்க: 120 ஆண்டுகளுக்குப் பின் டைம்-ட்ராவல் செய்து மீண்டும் வந்துள்ள க்ரெட்டா தன்பெர்க்..?
    Published by:Rahini M
    First published:

    Tags: Lasith Malinga

    அடுத்த செய்தி