நாட்டில் பாதுகாப்பும் இல்லை, சுதந்திரமும் இல்லை - பாகிஸ்தான் பயிற்சியாளர் பரபரப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் குழப்பங்கள் உள்ளது. அணியின் வீரர்கள் சிலர் என்னை ஏமாற்றி உள்ளனர்.

Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 4:14 PM IST
நாட்டில் பாதுகாப்பும் இல்லை, சுதந்திரமும் இல்லை - பாகிஸ்தான் பயிற்சியாளர் பரபரப்பு
கிராண்ட் பிளவர்
Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 4:14 PM IST
பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பும் இல்லை, சுதந்திரமும் இல்லை என அந்நாட்டின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஜிம்பாப்வே அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிராண்ட் பிளவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கடந்த 2014 முதல் பேட்டிங் பயிற்சியாளாராக இருந்து வந்தார்.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியதால் கடும் விமர்சனத்தை சந்தித்தது. பாகிஸ்தான் அணியை பலப்படுத்த முக்கிய மாற்றங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எடுத்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து பயிற்சியாளர்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.


இதனையடுத்து பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட பிளவர் அணியில் உள்ள சிக்கல்கள் குறித்து பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானில் நான் விரக்தியடைந்தது என்றால் பாதுகாப்பிலும், சுதந்திரத்திலும் தான். நான் பயிற்சியாளராக இருந்த போது பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் குழப்பங்கள் உள்ளது. அணியின் வீரர்கள் சிலர் என்னை ஏமாற்றி உள்ளனர். எனது பணிக்காலத்தின் போது அந்த அணியின் சிறந்த வீரர் என்றால் பாபர் அசாம் தான்.

அந்த அணி எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் பின்னால் நில்லுங்கள். நேர்மறை சிந்தனையோடு செயல்படுங்கள் என்றார்.

Loading...

Also Read : கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்... தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பதிலடி...!

Also Watch

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...