ஒருநாள் தொடர், டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை ஆட்டிப்படைத்த தமிழகத்தச் சேர்ந்த இடது கை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் டி.நடராஜன் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இப்போது நடராஜனுக்கு போதிய முதல்தர கிரிக்கெட் அனுபவம் இல்லை என்பதால் ஷர்துல் தாக்கூருக்கு சிட்னி டெஸ்ட் வாய்ப்பு கிடைக்கும் என்று சில செய்திகள் தற்போது தெரிவிக்கின்றன.
உமேஷ் யாதவ் காயமடைந்து தொடரிலிருந்து விலகியதையடுத்து அவர் இடத்துக்கு யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சு ஏற்கெனவே தத்தளிக்கும் ஆஸ்திரேலிய பேட்டிங்குக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது. மேலும் நடராஜன் ஒரு புத்திசாலியான பவுலர், ஆஸ்திரேலிய பிட்சும் அவருக்கு உதவும் என்பதால் அங்கு அறிமுகமாவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்.
இந்நிலையில் நடராஜனின் முதல் தர கிரிக்கெட் அனுபவமின்மையினால் ஷர்துல் தாக்கூருக்கு சிட்னி டெஸ்ட் வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி.நடராஜன் 20 முதல் தர போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்க, ஷர்துல் தாக்கூர் 62 முதல் தர போட்டிகளில் ஆடி 206 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். இதனால் ஷர்துல் தாக்கூர் அனுபவ வீரர் என்ற அடிப்படையில் அணிக்குள் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ஷர்துல் தாக்கூரின் அறிமுக டெஸ்ட் போட்டி, மே.இ.தீவுகளுக்கு எதிராக துரதிர்ஷ்டவசமாக காயத்தினால் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பிடிஐ-க்கு பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, நடராஜனுக்கு போதிய முதல் தர கிரிக்கெட் அனுபவம் இல்லை எனவே ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு அதிகம் என்று கூறினார்.
டெஸ்ட் தொடர் 1-1 என்று சமன் ஆகியுள்ள நிலையில் ஜனவரி 7ம் தேதி சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
-பிடிஐ தகவல்களுடன்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricketer natarajan, India vs Australia, Shardul thakur, Sydney