உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசி நாள்- பாத்ரூமில் ஒளிந்து கொண்ட கைல் ஜேமிசன்

ஜேமிசன் பந்தில் எல்.பி. ஆன விராட் கோலி.

சமீபத்தில் சவுத்தாம்ப்டனில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் அந்த கடைசி தருணங்களில் பதற்றம் அதிகரிக்க பாத்ரூமில் போய் ஓளிந்து கொண்டதாக கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சமீபத்தில் சவுத்தாம்ப்டனில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் அந்த கடைசி தருணங்களில் பதற்றம் அதிகரிக்க பாத்ரூமில் போய் ஓளிந்து கொண்டதாக கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.

  உண்மையில் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் எந்த வித பதற்றமும் இன்றி 139 வெற்றி ரன்களை அனாயசமாக எடுத்து இந்திய பேட்ஸ்மென்களுக்கு பாடம் இந்தப் பிட்சில் பாடம் எடுத்தனர். உண்மையில் கைல் ஜேமிசனை ஆடத்தெரியாத இந்திய பேட்ஸ்மென்கள்தான் பாத்ரூமில் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும், மாறாக கடைசி நேர பதற்றத்தில் தான் போய் பாத்ரூமில் ஒளிந்து கொண்டதாக கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.

  “நாங்கள் உள்ளே அமர்ந்து டிவியில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் டெலிகாஸ்ட்டில் தாமதம் இருந்தது, இந்திய ரசிகர்ள் ஒவ்வொரு பந்துக்கும் உற்சாகமூட்டி வந்தனர், இதனால் ஒவ்வொரு பந்தும் ஏதோ விக்கெட் விழுந்து விடும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆனால் அது ஒரு தடுப்பாட்டமாகவோ அல்லது ஒரு ரன்னாகவோ இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனக்கு பதற்றம் அதிகரித்தது, என்னால் அமர்ந்து மேட்சைப் பார்க்க முடியவில்லை, சில சமயங்களில் மேட்ச் பற்றி எதுவுமே தெரியவேண்டாம் என்று சப்தமில்லாத பாத்ரூமில் போய் ஒளிந்து கொண்டு பதற்றத்தை தவிர்க்க முயன்றேன். ராஸ் , கேன் இருவரும் எங்களின் டாப் பேட்ஸ்மென்கள். அவர்கள் எங்கள் பதற்றத்தைத் தணித்தனர், ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தனர்.

  Also Read: T20 World Cup | ஏன் எமிரேட்ஸில் டி20 உலகக்கோப்பை? : கொரோனா 2ம் அலை ஏற்படுத்திய பேரழிவே காரணம்- ஜெய் ஷா விளக்கம்

  வெற்றியைக் கொண்டாடினோம், நிதானக் கொண்டாட்டம்தான் பித்த நிலைக்கெல்லாம் செல்லவில்லை. ஓய்வறையிலும் பிறகு விடுதி அறையிலும் அனைவரு ஒன்றாக நேரத்தை செலவிட்டு மகிழ்ந்தோம். கோவிட்டினால் வெளியில் செல்ல முடியாதே.

  இரண்டாண்டு கால கடின உழைப்புக்குக் கிடைத்த பலன் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் அதைப்பற்றி பேசி மகிழ்வது மிகப்பெரிய அதிர்ஷ்டம். மிகவும் அருமையான கொண்டாட்டம் அது, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்றார் கைல் ஜேமிசன்.
  Published by:Muthukumar
  First published: