ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம்.. பஞ்சாப் அணி செய்த உதவி!

சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம்.. பஞ்சாப் அணி செய்த உதவி!

ரவிச்சந்திரன் அஸ்வின். (KXIP)

ரவிச்சந்திரன் அஸ்வின். (KXIP)

#KXIP donate Rs 25 lakh to families of #CRPFsoldiers killed in #Pulwamaattack | 2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பதாருக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

  2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

  தொடக்கப் போட்டியில் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

  கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி செய்தனர்.

  இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 5 வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் மொத்தம் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

  Also Watch...

  Published by:Murugesan L
  First published:

  Tags: IPL 2019, R Ashwin