தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த குர்ணால் பாண்டியா தவறவிட்ட கேட்ச் - வீடியோ

INDvBAN

  • Share this:
இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஹமதுல்லா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டி செய்த இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியின் ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்கள் ரன்குவிக்க முடியாமல் திணறினர். இந்திய அணி சார்பில் ஷிகார் தவான் அதிகபட்சமாக 41 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி நிதானமாக ஆடி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் டி20 போட்டியில் இந்திய அணியை முதன்முறையாக வென்றது வங்கதேசம்.

இந்த போட்டியில் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இவர் 38 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த எளிதான கேட்சை பவுண்டரி எல்லையில் இருந்த குர்ணால் பாண்டியா தவறவிட்டார். பந்து அவர் மீது பட்டு பவுண்டரிக்கு சென்றது. இந்த கேட்சை அவர் பிடித்து இருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும்.குர்ணால் பாண்டியா கேட்சை தவறவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வங்கதேச அணிக்கு எதிரான தோல்விக்கு இந்திய அணி பில்டிங்கில் செய்த சில தவறுகளே காரணம் என்றும் கேப்டன் ரோஹித் சர்மாவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

Also Watch : 

Published by:Vijay R
First published: