இந்தியாவின் வெற்றியை சரியாகக் கணித்த கும்ப்ளே: நெட்டிசன்கள் பாராட்டு மழை!

#AnilKumble had rightly predicted the result of #BorderGavaskar Test Series | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. #AUSvIND

இந்தியாவின் வெற்றியை சரியாகக் கணித்த கும்ப்ளே: நெட்டிசன்கள் பாராட்டு மழை!
முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே.
  • News18
  • Last Updated: January 8, 2019, 10:42 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாதான் வெற்றி பெறும் என அனில் கும்ப்ளே சரியாக கணித்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அடுத்து நடந்த, 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று 71 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டின் தாகத்தை தீர்த்தது.


Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


முன்னதாகவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கணித்து கூறியிருந்தார்.

Anil Kumble, அனில் கும்ப்ளே
இந்திய அணியில் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே. (File)
இதுகுறித்து கிரிக்கெட் நெக்ஸ்ட் இணையதளத்துக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், “இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும், மழை பெய்வதற்கான காலநிலை இருப்பதால் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்று கூறியிருந்தார்.

Border–Gavaskar Trophy, பார்டர் - கவாஸ்கர் கோப்பை
பார்டர் - கவாஸ்கர் கோப்பை உடன் இந்திய வீரர்கள். (ICC )


கும்ப்ளே கணித்தது போன்றே போட்டி தொடர் முடிவு மட்டுமின்றி, மழையால் சிட்னி டெஸ்ட் போட்டியும் பாதித்தது. இந்தியாவின் வெற்றியைச் சரியாக கணித்த கும்ப்ளேவை, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.ஐ.பி.எல் போட்டி எங்கு நடைபெறும்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

Also Watch...

First published: January 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்