Home /News /sports /

கபில் தேவிடம் கடுமையாக திட்டு வாங்கிய அனில் கும்ப்ளே அழுத கதை

கபில் தேவிடம் கடுமையாக திட்டு வாங்கிய அனில் கும்ப்ளே அழுத கதை

அனில் கும்ப்ளே-கபில்தேவ்

அனில் கும்ப்ளே-கபில்தேவ்

இங்கிலாந்தின் ஆலன் லாம்ப் என்ற ஒரு பெரிய பேட்டருக்கு கேட்சை விட்டார் அனில் கும்ப்ளே இதனையடுத்து கபில் தேவ் அவரை கடுமையாகத் திட்ட பெவிலியன் வந்து அழுது தீர்த்தாராம் கும்ப்ளே, இதனை பிஷன் சிங் பேடி தெரிவித்ததோடு இதுதான் அனில் கும்ப்ளேயை ஒரு பெரிய வீரராக உருவெடுக்கச் செய்தது என்கிறார் பிஷன் பேடி.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இங்கிலாந்தின் ஆலன் லாம்ப் என்ற ஒரு பெரிய பேட்டருக்கு கேட்சை விட்டார் அனில் கும்ப்ளே இதனையடுத்து கபில் தேவ் அவரை கடுமையாகத் திட்ட பெவிலியன் வந்து அழுது தீர்த்தாராம் கும்ப்ளே, இதனை பிஷன் சிங் பேடி தெரிவித்ததோடு இதுதான் அனில் கும்ப்ளேயை ஒரு பெரிய வீரராக உருவெடுக்கச் செய்தது என்கிறார் பிஷன் பேடி.

    கடந்த 1990இல் ஓல்டு ட்ராபோர்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அனில் கும்ப்ளே ஆலன் லம்ப் கொடுத்த எளிதான கேட்ச்சை கோட்டை விட்டார். பொதுவாகவே அறிமுகப் போட்டியில் அனைத்து வீரர்களும் தடுமாறுவார்கள் என்ற அடிப்படையில் அந்த தவறை செய்ததற்காக கபில் தேவ் கடுமையாக திட்டியதாக பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

    அந்த டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளைக்கு முன்பாக அனில் கும்ப்ளேயை கபில் தேவ் டீப் பைன் லெக்கில் நிறுத்தியிருந்தார். ஆளிருக்கும் தைரியத்தில் கபில் தேவ் ஆலன் லாம்புக்கு பவுன்சரை வீசினார். லாம்ப் ஹூக் செய்தார், பந்து நேராக இதற்காகவென்றே நிறுத்தப்பட்ட அனில் கும்ப்ளேவிடம் வந்தது, ஆனால் அவர் கேட்சை விட்டார்.

    டெஸ்ட் போட்டிகளில் உலக சாதனைக்கு ஒரு விக்கெட் தேவை என்ற நிலையில் கபில் தேவ் பந்தில் இந்தக் கேட்சை விட்டது கபிலுக்கு ஏகப்பட்ட கோபத்தைக் கிளப்பியது. கும்ப்ளேவை மைதானத்திலேயே கபில் திட்டினார், இதனால் மனமுடைந்த கும்ப்ளே பெவிலியன் சென்று அழுததாக பிஷன் பேடி கூறுகிறார்.

    இது தொடர்பாக பிஷன் பேடி கூறியதாவது:

    அது அவரின் அறிமுக டெஸ்ட் போட்டியாகும். ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடந்த அப்போட்டியின் போது நான் இந்திய அணியின் மேனேஜராக செயல்பட்டேன். அப்போது ஒரு கேட்சை விட்டதற்காக கும்ப்ளேவை களத்திலேயே கபில் தேவ் கடுமையாக திட்டினார். அப்போட்டி அவருக்கு அறிமுகம் என்றாலும் கபில் தேவ் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி சீனியராக இருந்தார்.

    ஆனால் அன்றைய நாளின் முடிவில் உடைமாற்றும் அறைக்கு நான் செல்லும் போது அனில் கும்ப்ளே அங்கு அழுது கொண்டிருப்பதை பார்த்தேன். என்னைக் கேட்டால் அந்தத் தருணம்தான் அவரை மேலும் மனதளவில் வலுவானவராக மாற்றியது. அந்தத் தருணத்தில் அவர் கண்ணீர் விட்டது மிகவும் முக்கியமானதாகும். அந்த தருணத்தில் தாம் சுமாராக செயல்படுகிறோம் என்று நினைத்ததாலேயே நாளடைவில் அவர் இந்தளவுக்கு வளர்ந்துள்ளார்.

    என்றார் பிஷன் சிங் பேடி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Anil kumble

    அடுத்த செய்தி