"ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறு தான்; அதற்காக வருதப்படவில்லை" - நடுவர் குமார் தர்மசேனா

பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸின் பேட்டில் உரசி பவுண்டரிக்கு சென்றது. இதற்கு நடுவர் 6 ரன்கள் கொடுத்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

Kumar dharmasena,
  • News18
  • Last Updated: July 21, 2019, 9:50 PM IST
  • Share this:
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுக்கப்பட்டது தவறான முடிவு தான், ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை என இலங்கை நடுவர் குமார் தர்மசேனா தெரிவித்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது.

இந்த போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரி எல்லைக்கு விரட்டி பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சித்தார்.


நியூசிலாந்து வீரர் கப்தில் ரன்அவுட் செய்யும் நோக்கத்துடன் பந்தை விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்தார். பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸின் பேட்டில் உரசி பவுண்டரிக்கு சென்றது. இதற்கு நடுவர் 6 ரன்கள் கொடுத்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இறுதிப் போட்டியில் நடுவராக இருந்த குமார் தர்மசேனா கருத்து தெரிவித்துள்ளார். “டிவி ரிப்ளேவில் பார்க்கும் போது தான் நான் கொடுத்த முடிவு தவறு என்று புரிந்து கொண்டேன். ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.

அந்த நேரத்தில் களத்திலிருந்த மற்ற நடுவருடன் கலந்து ஆலோசித்தேன். என்னால் அப்போது டிவி ரிப்ளேவில் பார்க்க முடியாது என்பதால் நடுவர்களுடன் ஆலோசித்து அவர்கள் எல்லைக்கோட்டை கடந்ததாக கூறிய பின்பே 6 ரன்கள் கொடுத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.Also Watch

First published: July 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading