• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 Ranking: ஜெட் வேகத்தில் முன்னேறிய குல்தீப் யாதவ்!

T20 Ranking: ஜெட் வேகத்தில் முன்னேறிய குல்தீப் யாதவ்!

கேப்டன் கோலியுடன் குல்தீப் யாதவ்

கேப்டன் கோலியுடன் குல்தீப் யாதவ்

T20I Ranking: Kuldeep Yadav Move Top Five | 714 புள்ளிகளுடன் தற்போது தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்ததே குல்தீப் யாதவின் சிறந்த இடமாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வதேச டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிந்தது. இதனை அடுத்து, வீரர்களின் சிறந்த பங்களிப்பின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேற்றம்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரில் மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், 714 புள்ளிகளுடன் 20 இடங்கள் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார் குல்தீப். இதுவே அவரின் சிறந்த தரவரிசையாக உள்ளது.

க்ருனல் பாண்டியா 98-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற பந்துவீச்சாளர்களான புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் 19-வது மற்றும் 21-வது இடத்தில் உள்ளனர்.

Kuldeep Yadav
ஃபிஞ்ச் விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் குல்தீப் யாதவ் (BCCI)


ரோஹித் சர்மா & கே.எல்.ராகுல் பின்னடைவு

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 11-வது இடத்திற்கு வந்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தலா 2 இடங்கள் பின்னடைவை சந்தித்து 6-வது மற்றும் 9-வது இடங்களில் உள்ளனர். கேப்டன் விராட் கோலி 14-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Rohit Sharma
ரோஹித் சர்மா (BCCI)


ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: