Home /News /sports /

இந்தியாவின் முதல் சைனாமேன் பவுலருக்கே இந்த கதியா?- கைவிடப்பட்ட பரிதாப பந்துவீச்சாளர்

இந்தியாவின் முதல் சைனாமேன் பவுலருக்கே இந்த கதியா?- கைவிடப்பட்ட பரிதாப பந்துவீச்சாளர்

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

ஐபிஎல் கிரிக்கெட் தான் இந்திய அணியில் தேர்வாக அளவுகோல் என்றால் இடது கை சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்படுவது புரியாத புதிரே.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஐபிஎல் கிரிக்கெட் தான் இந்திய அணியில் தேர்வாக அளவுகோல் என்றால் இடது கை சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவ் இந்திய டி20 உலகக்கோப்பை அணி அல்லது குறைந்தது ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20க்கான இந்திய அணியில்  இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து இவர் ஒழிக்கப்பட்டு வருகிறார். காரணம் சஞ்சு சாம்சன் போல் இதுவும் ஒரு புரியாத புதிரே.

குல்தீப் யாதவ் இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளையும், 69 ஒருநாள் போட்டிகளில் 112 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவ் இந்தியாவின் முதல் சைனாமேன் பந்துவீச்சாளர். இவரின் இடத்தில் தான் அஸ்வின் மற்றும் ரவிபிஷ்னோய் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ், 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்ட அவர், மீண்டும் திரும்ப முடியவில்லை. தனக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியாமல் இருக்கும் குல்தீப் யாதவுக்கு கோலி - ரவி சாஸ்திரி கூட்டணியும் வாய்ப்புகளை மறுத்தது. இப்போது ரோகித் - திராவிட் கூட்டணி வாய்ப்பு கொடுப்பது பற்றி பரிசீலித்ததாகவே தெரியவில்லை.

செஹல்-குல்தீப் கூட்டணி இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளது. ஆனால் செஹல் அணியின் மூத்த வீரர்களின் செல்லப்பிள்ளையாக, விராட் கோலியை பகைத்துக் கொண்ட அனில் கும்ப்ளேயின் செல்லப்பிள்ளையான குல்தீப் யாதவுக்கு துரதிர்ஷ்டம் துரத்துகிறது.

இதையும் படிங்க: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்க், முதல் சுற்றில் தோல்வி

இவரைப்போன்ற சைனமேன் பவுலர்கள் பந்தை மணிக்கட்டில் திருப்புபவர்கள்.  இவர்கள் விக்கெட் எடுக்க ஜடேஜா, அஸ்வின் போல் குழிப்பிட்ச்கள் அவசியமில்லை, நல்ல பிட்சிலும் இவர்கள் தங்கள் கையில் உள்ள மாயாஜாலத்தின் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர்கள். இலங்கையில் தீக்‌ஷனா எப்படி புதிர் பவுலரோ, தென் ஆப்பிரிக்காவில் ஷம்சி எப்படி புதிர் பவுலரோ அதேபோல்தான் குல்தீப் ஒரு புதிர் பவுலர். ஏனோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்திய அணித்தேர்வுக்குழு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Published by:Murugesh M
First published:

Tags: Cricket, Kuldeep Yadav, Team India

அடுத்த செய்தி