ஐசிசி டி-20 தரவரிசையில் குல்தீப் யாதவ் புதிய உச்சம்!

#KuldeepYadav attains career-best 2nd spot | நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி இழந்ததால், டி-20 அணிகளுக்கான தரவரிசையில் 2 புள்ளிகளை இழந்தது.

Web Desk | news18
Updated: February 11, 2019, 2:41 PM IST
ஐசிசி டி-20 தரவரிசையில் குல்தீப் யாதவ் புதிய உச்சம்!
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். (BCCI)
Web Desk | news18
Updated: February 11, 2019, 2:41 PM IST
ஐசிசி டி-20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் யாதவ் முதல் முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி போட்டி நேற்று (பிப்.10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்ததால், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

Indian Team, இந்திய அணி
இந்திய அணி தோல்வி. (BCCI)


இந்நிலையில், டி-20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி இழந்ததால், அணிகளுக்கான தரவரிசையில் 2 புள்ளிகளை இழந்தது. இருப்பினும், 124 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இந்தியா நீடிக்கிறது.

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை இழந்ததால், முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியும் 3 புள்ளிகளை இழந்து 135 புள்ளிகளுடன் இருக்கிறது. பாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்ரிக்க அணி, 4 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 118 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Rohit Sharma, ரோகித் சர்மா.
பந்தை விளாசும் ரோகித் சர்மா. (ICC)


பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், டாப் 10 இடங்களுக்கு ரோகித் சர்மா மட்டுமே இருக்கிறார். இவர் 3 இடங்கள் முன்னேறி 698 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

Kuldeep Yadav, குல்தீப் யாதவ்
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். (BCCI)


பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் (728) முதல் முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவே இவரின் சிறந்த தரவரிசையாகும். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் (793) முதல் இடத்தில் உள்ளார்.

Video: காலில் விழுந்த ரசிகர்... தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த தோனி..!

Also Watch...

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...