Home /News /sports /

Video: 64 ஆண்டு கால சாதனையை தகர்த்தெறிந்த ‘சைனாமேன்’

Video: 64 ஆண்டு கால சாதனையை தகர்த்தெறிந்த ‘சைனாமேன்’

சிட்னியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ். (BCCI)

சிட்னியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ். (BCCI)

#KuldeepYadav finished with five wickets for 99 runs | சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #AUSvIND

  • News18
  • Last Updated :
    சிட்னி டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 64 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா, ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினர்.

    பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், 4-ம் நாளில் 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் (சைனாமேன்) குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஆஸி. வீரர் கவாஜாவின்  விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் யாதவ். (BCCI)


    குல்தீப் யாதவ், டெஸ்ட் அரங்கில் 2-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் தான் விளையாடிய முதல் டெஸ்டிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார்.

    குல்தீப் யாதவ், Kuldeep Yadav
    ஆஸி. விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்திய குல்தீப் யாதவை பாராட்டும் சகவீரர்கள். (BCCI)


    ஆஸ்திரேலிய மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பமனாக இருந்த குல்தீப், 64 ஆண்டு காலச் சாதனையை முறியடித்துள்ளார்.



    சிட்னியில் 1955-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஜானி வார்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2-வது இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் என்றாலும், இந்தச் சாதனையை செய்த முதல் ‘சைனாமேன்’  குல்தீப் யாதவ் ஆவார்.

    சிட்னி டெஸ்ட்: 300-க்கு ஆஸி. ஆல்அவுட்.. வெளிச்சமில்லாததால் 4-ம் நாள் ஆட்டம் விரைவில் முடிந்தது!


    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: India vs Australia, Kuldeep Yadav, Sydney

    அடுத்த செய்தி