தொடக்க வீரர்கள் அதிரடி! ராஜஸ்தானை எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா


Updated: April 7, 2019, 11:03 PM IST
தொடக்க வீரர்கள் அதிரடி! ராஜஸ்தானை எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா
கொல்கத்தா

Updated: April 7, 2019, 11:03 PM IST
ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் 21-வது லீக் போட்டி ஜெய்பூர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே குவித்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் லைனும், சுனில் நாரினியும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். 91 ரன்களுக்குதான் கொல்கத்தா முதல் விக்கெட்டை இழந்தது. நாரினி 47 ரன்களிலும் கிறிஸ் லைன் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 13.5 ஓவரில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதனையடுத்து, 5 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேநேரத்தில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...