10 ஆண்டுகளின் சிறந்த வீரராக 'கிங்' கோலி தேர்வு; தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது

10 ஆண்டுகளின் சிறந்த வீரராக 'கிங்' கோலி தேர்வு; தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது

விராட் கோலி எம்.எஸ் தோனி

கடந்த 10 ஆண்டுகளின் கிரிக்கெட் ஆட்ட நல்லுணர்வுக்கான ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது தோனிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  ஐசிசி விருதுகளில் கடந்த 10 ஆண்டுகளின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி இதனை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

  அதே போல் மகளிர் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் எலிசி பெரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  விராட் கோலி ஐசிசி விருதுகள் காலக்கட்டத்தில் தனது 70 சர்வதேச சதங்களில் 67 சதங்களை அடித்துள்ளார்.

  இதே காலக்கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 94 அரைசதங்களையும் விராட் கோலிதான் அதிகபட்சமாக அடித்துள்ளார். அதே போல் இதே காலக்கட்டத்தில் 20,936 ரன்களை 56.97 என்ற ஆகச்சிறந்த சராசரியில் கோலி எடுத்திருக்கிறார்.

  ஒட்டுமொத்தமாக கிங் கோலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 12,040 ரன்களையும் டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,928 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் 7,318 ரன்களையும் விளாசி உள்ளார் விராட் கோலி, அனைத்து வடிவங்களிலும் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.

  ஆஸ்திரேலியாவின் எலிசி பெரி, கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்பதோடு பத்தாண்டுகளின் சிறந்த ஒருநாள், டி20 வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  கடந்த 10 ஆண்டுகளின் கிரிக்கெட் ஆட்ட நல்லுணர்வுக்கான ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது தோனிக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் இயன் பெல்லை அவுட் என்று தீர்ப்பளித்தும் அது ரன் அவுட் இல்லை, ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்று தோனி அவரை மீண்டும் விளையாடச் சொன்னார். இந்த சம்பவத்தை ரசிகர்கள் சிறந்த கிரிக்கெட் ஸ்பிரிட் என்று தோனிக்கு வாக்குகளை அள்ளிக் குவித்தனர்.
  Published by:Muthukumar
  First published: