‘வாட் எ வின்’- ரஹானே கேப்டன்சியையும் அணியையும் பாராட்டித் தள்ளிய உற்சாகத்தில் விராட் கோலி

ரஹானே-கோலி.

ரஹானே கேப்டன்சிக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன, ரஹானே 112 மற்றும் 27 நாட் அவுட் மூலம் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

 • Share this:
  அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அனைவராலும் ஊற்றி மூடப்பட்ட இந்திய அணியை நம்பிக்கையுடன் பொறுப்பேற்று வழிநடத்தி அபார வெற்றியை மெல்போர்னில் சாதித்த அஜிங்கிய ரஹானேவை விராட் கோலி பாராட்டியுள்ளார்.

  மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கும் 2வது இன்னிங்சில் 200 ரன்களுக்கும் முடக்கியதில், பும்ரா, அஸ்வின், சிராஜ், ஜடேஜா, உமேஷ் பங்களிப்பு ஏராளம், குறிப்பாக முதல் இன்னிங்சில் 10வது ஓவரே கொண்டு வரப்பட்ட அஸ்வின் கடும் நெருக்கடி கொடுத்து ஆஸ்திரேலியாவைக் காலி செய்தார்.

  அஸ்வினை ஆஸ்திரேலியர்களுக்கு ஆடவே தெரியவில்லை என்பதே உண்மை. ரஹானே அபாரமான சதம் அடித்தார், ஜடேஜா 57 ரன்கள் எடுத்து கூட்டணி அமைத்து ஆஸ்திரேலியாவின் வெற்றி ஆசையிலிருந்து வெகுதூரம் தள்ளிக் கொண்டு சென்றனர்.

  இந்நிலையில் ரஹானே கேப்டன்சிக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன, ரஹானே 112 மற்றும் 27 நாட் அவுட் மூலம் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

  இந்நிலையில் தன் முதல் குழந்தை பிறப்புக்காக மனைவி அனுஷ்கா அருகில் இருக்க வேண்டும் என்ற குடும்ப கடமை அழைக்க இந்தியா திரும்பிய விராட் கோலி, மெல்போர்ன் வெற்றியைப் பாராட்டி தன் சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  அதில் அவர், “இது என்ன மாதிரியான வெற்றி.. உண்மையில் அசத்தல், பிரமாதம்.. அணி ஒட்டுமொத்த உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. வீரர்களுக்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், குறிப்பாக அஜிங்கிய ரஹானே அணியை அபாரமாக வெற்றிக்கு வழிநடத்திச் சென்றார், இங்கிருந்து மேலும் முன்னேற்றம், மேன்மேலும் உயர்வுதான்” என்று கோலி உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: