“தாவி பிடித்த கோலி... பாய்ந்து பிடித்த சஹா...“ யார் கேட்ச் பெஸ்ட்? வீடியோ

INDvSA

  • Share this:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் கோலி, சஹா போட்டி போட்டு அசத்தலான கேட்சை பிடித்துள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலிங் பேட்டிங் செய்தது.

கேப்டன் விராட் கோலியின் அதிரடியான இரட்டை சதத்தால் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 275 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இந்த போட்டியில் இந்திய அணியின் ஃப்ல்டிங் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக விராட் கோலி, சஹா பிடித்த கேட்ச் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய அன்ரிச் நார்ட்ஜே அடித்த பந்தை கேப்டன் கோலி லாவகமாக தாவிப் பிடித்து கேட்ச் செய்தார்.

இந்த டெஸ்டின் சிறந்த கேட்ச் என்று கோலியை பாராட்டி முடிப்பதற்குள் விக்கெட் கீப்பர் சாஹா அவருக்கு போட்டியாக ஒரு கேட்சை பாய்ந்து பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா வீரர் தியூனிஸ் டி ப்ரூயின் பேட்டில் பட்டு சென்ற பந்தை சஹா பாய்ந்து சென்று பிடித்து அசத்தினார்.கோலி - சஹா இருவரும் போட்டி போட்டு அசத்தலான கேட்சை பிடித்து தென்னாப்பிரிக்கா அணியை திணறடித்து விட்டனர். 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 326 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Also Watch 

Published by:Vijay R
First published: