• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ICC T20 rankings | கோலி, ரோகித் முன்னேற்றம் சூர்யகுமார் யாதவ் விறுவிறு முன்னேற்றம்

ICC T20 rankings | கோலி, ரோகித் முன்னேற்றம் சூர்யகுமார் யாதவ் விறுவிறு முன்னேற்றம்

ரோஹித் ஷர்மா, வீரட் கோலி.

ரோஹித் ஷர்மா, வீரட் கோலி.

ICC T20 Ranking ஐசிசி டி20 ரேங்கிங், தரவரிசை. சமீபத்தில் முடிந்த இந்தியா-இங்கிலாந்து டி20 தொடருக்குப் பிறகான தரவரிசை முழுவிவரம், முதல் ஒருநாள் முடிந்த பிறகான தரவரிசை நிலவரம், கோலி, ரோகித் முன்னேற்றம், சூரியகுமார் யாதவ் விறுவிறு முன்னேற்றம்.

  • Share this:
    ஐச்சி டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பேட்டிங்கில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4ம் இடம் சென்றுள்ளார். ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 14ம் இடம்பிடித்துள்ளார்.

    விராட் கோலி 3 முறை 50+ ஸ்கோரைக் கடந்து சென்றார். அதுவும் 52 பந்துகளில் அடித்த 80 ரன்கள் இவருக்கு தரவரிசைப் புள்ளிகளில் வலுசேர்த்தது. இதனையடுத்து கே.எல்.ராகுலையும் கடந்து டி20 தரவரிசையில் டாப் இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஆனார் கோலி.

    அதே போல் 34 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த ரோகித் சர்மாவும் 3 இடங்கள் முன்னேறி 14ம் இடம் பிடித்துள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் 5 இடங்கள் முன்னேறி 26ம் இடத்துக்கு வந்துள்ளார்.

    ரிஷப் பந்த், சூரியகுமார் யாதவ் ஆகியோரும் பெரிய அளவில் தரவரிசையில் முன்னேற்றம் கண்டனர். கீழே இருந்த சூரிய குமார் யாதவ் 66ம் இடத்துக்கும் ரிஷப் பந்த் 11 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 69ம் இடம் பிடித்துள்ளார்.

    கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் 21 இடங்கள் முன்னேறி 24ம் இடம் பிடித்துள்ளார். ஹர்திக் பாண்டியா 47 இடங்கள் முன்னேறி பவுலிங்கில் 78ம் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்தின் டேவிட் மலான் கடைசி போட்டியில் 68 ரன்கள் விளாசி தன் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். ஜோஸ் பட்லர் ஒரு இடம் முன்னேறி 18ம் இடத்தில் உள்ளார்.

    லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷீத் ஒரு இடம் முன்னேறி 4ம் இடத்திற்கு முன்னேறினார். வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 12 இடங்கள் முன்னேறி 22ம் இடம் பிடித்தார். அதிவேக பவுலர் மார்க் உட் 12 இடங்கள் முன்னேறி 27ம் இடம் வந்துள்ளார்.

    ஒரு நாள் தரவரிசையில் ஜானி பேர்ஸ்டோ 4 இடங்கள் முன்னேறி கரியர் பெஸ்ட் 7ம் இடத்தில் உள்ளார். நேற்று 94 ரன்களை விளாசி கோலியை கதிகலங்க விட்டார். இயான் மோர்கன் 1 இடம் முன்னேறி 24ம் இடம் பிடித்துள்ளார். பவுலிங்கில் பென் ஸ்டோக்ஸ் 64ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஷிகர் தவான் நேற்று 98 விளாசியதால் 15ம் இடத்துக்கு பேட்டிங் தரவரிசையில் முன்னேறியுள்ளார். ஒருநாள் பவுலிங் தரவரிசையில் புவனேஷ்வர் குமார் 20ம் இடத்துக்குள் நுழைந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: