ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி!

டெஸ்ட் தரவரிசைப் பட்டியிலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்திற்கும் - கோலிக்கும் இடையே தான் கடுமையான போட்டி நிலவும்.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி!
விராட் கோலி
  • News18
  • Last Updated: July 23, 2019, 9:48 PM IST
  • Share this:
ஐசி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசை பட்டியிலில் முதலிடத்தில் உள்ளார். ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 சதங்கள் விளாசி உள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 881 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் புஜாரா 881 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் தரவரிசைப் பட்டியிலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்திற்கும் - கோலிக்கும் இடையே தான் கடுமையான போட்டி நிலவும்.


ஒரு வருட தடைக்குபின் ஸ்மித் ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளார். இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கோலி கடுமையான போட்டியாக இருப்பார்.

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்திலும், ரவிசந்திரன் அஸ்வின் 10-வது இடத்திலும் உள்ளனர்.

Also Watch
First published: July 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்