வெற்றியைப் பறித்த நோ-பால்... நடுவர்களை சாடிய காயம் பட்ட சிங்கம்...!

போட்டியின் போது நடுவர்கள் கண்களை திறந்து பார்க்க வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார். இதேபோல, மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வெற்றியைப் பறித்த நோ-பால்... நடுவர்களை சாடிய காயம் பட்ட சிங்கம்...!
ஐபிஎல்
  • News18
  • Last Updated: March 29, 2019, 9:44 AM IST
  • Share this:
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு - மும்பை அணிகள் மோதிய போட்டி நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதையடுத்து, பேட்டிங்கைத் தொடங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.


சூர்யகுமார் யாதவ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிவரை ஆட்டமிழக்காத ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பார்த்திவ் படேல் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் விராட் கோலி 32 பந்துகளில் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 70 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு அணியின் ஏ பி டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் 4000 ரன்களை கடந்துள்ளார்


எனினும், 20 ஓவர்களில் பெங்களூரு அணி, 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களையே எடுத்தது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணி பந்துவீச்சாளர் பும்ரா, ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

மும்பை அணியின் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


பெங்களூரு அணி வெற்றி பெற கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், ரன் ஏதும் எடுக்காததால் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரீப்ளேவில் பார்த்த போது மலிங்கா வீசிய கடைசி பந்து நோ- பால் என தெரியவந்தது.

மலிங்கா வீசிய நோ-பால்


ஆனால், ஆடுகள நடுவர் இதனை கவனிக்காமல் விட்டுவிட்டார். இதனால், விராட் கோலி அதிருப்தி அடைந்தார். முடிவை மாற்றி அறிவிக்க கோரி நடுவர்களிடம் முறையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போட்டியின் போது நடுவர்கள் கண்களை திறந்து பார்க்க வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார். இதேபோல, மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Also watch

First published: March 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading