• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலியின் விநோதமான ட்விட்டர் பதிவு... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

விராட் கோலியின் விநோதமான ட்விட்டர் பதிவு... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

  • Share this:
    ட்விட்டரில் விராட் கோலியின் வினோதமான பதிவை நெட்டிசன்கள் பலர் கேலி செய்து வருகின்றனர்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடாமல் ஓய்வில் இருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலி தற்போதைய ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முஹமது ஷமி, ப்ரதிவ் ஷா உடன் விராட் கோலி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதில் 3 பேரும் வித்தியாசமான முறையில் போஸ் கொடுத்து உள்ளனர்.









    இந்திய அணி டி20 தொடரை முழுமையாக வென்று சாதனை படைத்த போதும் ஒரு நாள் போட்டியை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது. இதனால் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: