• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • தோனியின் அறை 24 மணி நேரமும் திறந்திருக்கும், கோலியிடம் பழக முடியாது- ரிப்போர்ட்

தோனியின் அறை 24 மணி நேரமும் திறந்திருக்கும், கோலியிடம் பழக முடியாது- ரிப்போர்ட்

கோலி-தோனி

கோலி-தோனி

“தோனியின் அறை 24 மணி நேரமும் சக வீரர்களுக்காக திறந்திருக்கும். வீரர்கள் அவர் அறையில் என்ன வேண்டுமானால் செய்யலாம், கிரிக்கெட் பற்றியும் பேசலாம். உணவு அருந்தலாம். ஆனால் மைதானத்துக்கு வெளியே கோலியைப் பிடிக்க முடியாது. தொடர்பில் இருக்க மாட்டார். ரோகித் சர்மாவிடம் தோனியின் சாயல்கள் வேறு வகையில் உள்ளன.

 • Cricketnext
 • Last Updated :
 • Share this:
  கோலி டி20 கேப்டன்சியை உலகக்கோப்பைக்கு பிறகு துறக்கப்போவதாக அறிவித்ததையடுத்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, இதில் முன்னாள் வீரர் ஒருவர், அதாவது கோலி கேப்டன்சியின் ஆரம்ப காலங்களில் இருந்தவர் பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் கோலியின் எதேச்சதிகாரப் போக்கை அம்பலப்படுத்தியுள்ளார்.

  ஐசிசி டிராபி இன்மை, ஐபிஎல் கோப்பை இன்மை என்று பல காரணங்கள் கோலிக்கு எதிராகச் சொல்லப்பட்டாலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் பிசிசிஐ-யின் சில வட்டாரங்களும் விராட் கோலியின் அணுகுமுறை பற்றிய மாற்றுச் சித்திரங்களை வழங்குகின்றன என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கிறது. கோலியை நெருக்கமாக அறிந்தவர்கள் அவரது எதேச்சதிகாரப் போக்குகள் பற்றி கூறுவதாக பிடிஐ தெரிவிக்கிறது.

  அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் வேண்டுமென்றே 2 ஸ்பின்னர்களை வைத்தது முதல் 2019 உலகக்கோப்பையில் 4ம் நிலையில் அணியில் யாரையும் செட்டில் ஆகவிடாமல் செய்தது வரை அவரது அட்ஜஸ்ட் செய்யும் போக்கற்ற இறுகிய மன நிலை கிசுகிசுக்கப்பட்டு வந்ததே. சமீபத்தில் வேண்டுமென்றே உலகின் நம்பர் 1 ஸ்பின்னர் அஸ்வினை இங்கிலாந்தில் ட்ராப் செய்தது என்று கோலிக்கு எதிராக நிறைய விஷயங்கள் கிளம்பியுள்ளன.

  Also Read: Virat Kohli| துணைக் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை தூக்கச் சொன்னாரா கோலி?

  Also Read: ஷிகர் தவான் வேண்டும் என்று பிடிவாதம்.. தேர்வுக்குழுவுடன் வேறுபாடு: கோலி கேப்டன்சி உதறல் பின்னணி விவரம்


  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி கேப்டன்சியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சுருண்ட பிறகு தந்தைமை விடுமுறையில் கோலி சென்ற பிறகே ஒட்டுமொத்த காட்சியும் மாறிவிட்டது. யாரும் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் அதன் பிறகே வீரர்கள் ஒன்று சேர்ந்தனர். முழு பல ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்கள். மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக கோலி இந்தியாவில் டெஸ்ட் கேப்டன்சிக்குத் திரும்பிய போது அணியே மாறியிருந்தது, இளம் வீரர்கள் தங்களை உண்மையாக ஆற்றலை உணர்ந்தனர்.

  முன்னாள் வீரர் ஒருவர் கோலியின் பிரச்னை பற்றி கூறும்போது, “தோனியின் அறை 24 மணி நேரமும் சக வீரர்களுக்காக திறந்திருக்கும். வீரர்கள் அவர் அறையில் என்ன வேண்டுமானால் செய்யலாம், கிரிக்கெட் பற்றியும் பேசலாம். உணவு அருந்தலாம். ஆனால் மைதானத்துக்கு வெளியே கோலியைப் பிடிக்க முடியாது. தொடர்பில் இருக்க மாட்டார். ரோகித் சர்மாவிடம் தோனியின் சாயல்கள் வேறு வகையில் உள்ளன.

  ஜூனியர் வீரர்களை உணவுக்காக வெளியே அழைத்துச் செல்வார் ரோகித் சர்மா. அவர்கள் சரியாக ஆடாத போது தட்டிக்கொடுத்து அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு ஊக்குவிப்பார். ஜூனியர் பிளேயர்களைப் பொறுத்தவரை கோலி மிகவும் பலவீனமாகக் கையாண்டுள்ளார். அதாவது அவர்கள் சரியாக ஆடாத போது உதவமாட்டார், அணியை விட்டுத் தூக்கி விடுவார்.

  குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட்டுகள் எடுத்த பிறகே காணாமல் போனார், ரிஷப் பந்த் சரியாக ஆடுவதில்லை என்று மீடியாவிடமே கூறினார் கோலி. அவரது பிரச்சனைகளை அவரிடம் பேசித்தீர்க்கவில்லை. உமேஷ் யாதவ் ஒரு சீனியர் பவுலர், உள்நாட்டு மட்டைப் பிட்ச்களில் அவர்தான் ஓடும் குதிரை, ஆனால் வெளிநாடுகளில் யாராவது காயமடைந்தால்தான் உமேஷுக்கு அணியில் இடம். கேப்டனின் உதவி தேவைப்படும் போது வீரர்களுக்காக அங்கு கோலி நிற்கமாட்டார்” என்று கூறியதாக பிடிஐ செய்தி கூறுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: