சதத்தில் சதம்... சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - பிராட் ஹாக்
சச்சின் நிகழ்த்திய 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி உடைப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட்ஹாக் யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலி - சச்சின் டெண்டுல்கர்
- News18 Tamil
- Last Updated: July 6, 2020, 1:54 PM IST
இது தொடர்பாக பிராட் ஹாக் கூறுகையில், தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் நிச்சயம் முறியடிக்க முடியும். தெண்டுல்கர் விளையாடத் தொடங்கிய போது இருந்ததை விட இப்போது வீரர்களின் உடல்தகுதி பராமரிப்பு சிறப்பாக உள்ளது. உடல்தகுதியை தொடர்ந்து வலுவாக வைத்திருக்க தரம்வாய்ந்த நிபுணர்கள் உதவுகிறார்கள்.
காயப் பிரச்சினையால் ஒரு வீரர் தவற விடும் ஆட்டங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது, கோலியால் தெண்டுல்கரின் சாதனையை தகர்த்து விட முடியும் என்றே நினைக்கிறேன்“ என்றார்
அதிக சர்வதேச சதங்கள் அடித்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 71 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் 2-ம் இடத்திலும், 70 சதங்களுடன் கோலி 3-ம் இடத்திலும் உள்ளனர்