ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் அதிக வெற்றிகள்: கோலி சாதனை

கோலி.

ஆசிய நாடுகளின் கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களில்  தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற ஆசிய கேப்டன்களில் முதன்மையானவர் ஆனார் விராட் கோலி.

 • Share this:
  ஆசிய நாடுகளின் கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களில்  தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற ஆசிய கேப்டன்களில் முதன்மையானவர் ஆனார் விராட் கோலி.

  ஓவலில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின் மகத்தான வெற்றியை கோலிப் படை பதிவு செய்தது. அதுமட்டுல்லாமல் இங்கிலாந்து தொடரில் 2 வெற்றிகளை கடந்த 35 ஆண்டுகளுக்குப் பின் பதிவு செய்துள்ளது.

  விராட் கோலி இதுவரை 65 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். அதில் 38 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும் கோலி தலைமையில் இந்திய அணி சந்தித்துள்ளது. 11 போட்டிகளை டிரா செய்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டு அணிக்கு எதிராக கோலி இதுவரை 3 வெற்றிகளையும், ஆஸ்திரேலிய மண்ணில் 2 வெற்றிகளையும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த மண்ணில் ஒரு வெற்றியையும் கோலி தலைமையில் இந்திய அணி பெற்றுள்ளது.

  இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற ஆசிய அணிகளின் கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் இதுவரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி 22 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் 13 தோல்விகள், 3 போட்டிகள் டிரா, 6 ஆட்டங்களில் வென்றுள்ளது.

  Also Read: இங்கிலாந்தின் வீழ்ச்சி இந்திய அணியை மட்டமாக எடைபோட்டதால் தான்: சுனில் கவாஸ்கர்

  ஆசிய அணிகளில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்கள் மியான்தத், வாசிம் அக்ரம் ஆகியோர் தலைமையில் அந்நாட்டு அணி சேனா நாடுகளுக்கு எதிராக 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: