WWCT20: இந்திய மகளிர் அணிக்கு கோலி உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து!

Kohli And Pant Cheer for Team India in Womens World T20 | நடப்பு சீசனில் தோல்வியே சந்திக்காமல், பலம் வாய்ந்த அணியாக இந்திய மகளிர் அணி வலம் வருகிறது.

WWCT20: இந்திய மகளிர் அணிக்கு கோலி உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து!
விராட் கோலி வாழ்த்து | Twiter/Virat Kohli
  • News18
  • Last Updated: November 16, 2018, 5:40 PM IST
  • Share this:
மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றும் வரும் மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதனை அடுத்து, இந்திய மகளிர் அணிக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

“உலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது” என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.





இதேபோல், கிரிக்கெட் வீரர்களான கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா உள்ளிட்ட மற்ற விளையாட்டுக்களைச் சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.





ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, நடப்பு சீசனில் தோல்வியே சந்திக்காமல், பலம் வாய்ந்த அணியாக வலம் வருகிறது. தொடர்ந்து இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் கோப்பை இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் பார்க்க...

First published: November 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்