பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு... பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் கோலி...!

#ViratKohli breaks silence on #Pandya, #KLRahul's Issue | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

news18
Updated: January 11, 2019, 12:54 PM IST
பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு... பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் கோலி...!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (AFP)
news18
Updated: January 11, 2019, 12:54 PM IST
ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் விவகாரத்தில் பிசிசிஐ-யின் முடிவுக்காக காத்திருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தனியார் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Hardik Pandya, KL Rahul, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா. (Twitter/HardikPandya)


நிகழ்ச்சியில், பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் இனவெறியைத் தூண்டுதல் உள்ளிட்டவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருவரும் பதிலளித்தனர். இதனால், அவர்கள் இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர். இதனை அடுத்து, தனது தவறுக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார்.

Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா. (Twitter)


இந்த விவாகாரம் குறித்து, ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்திருந்தார்.

bcci, vinod rai, பிசிசிஐ
பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய். (Getty Images)
Loading...
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் விவகாரத்தில் பிசிசிஐ-யின் முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

“ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அதை அணியோடு சேர்க்க வேண்டாம். அணியில் மாற்றம் செய்தாலும், நமது நம்பிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என அணி கருதுகிறது” என அவர் கூறினார்.

Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
விராட் கோலி மற்றும் அணி வீரர்கள். (AP Photo/Matt Dunham)


மேலும், “கிரிக்கெட் வாரியம் தனது முடிவை அறிவித்த பிறகு, யாரை அணியில் சேர்ப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்” என விராட் கோலி கூறியுள்ளார். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

#HappyBirthdayRahulDravid இந்திய அணியின் சுவருக்கு இன்று பிறந்தநாள்!

Also Watch...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...