• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KL Rahul: முதல் டெஸ்ட்டில் பும்ரா, இப்போது லார்ட்ஸ் கிங் ராகுல்- இன்னொரு மகுடம்

KL Rahul: முதல் டெஸ்ட்டில் பும்ரா, இப்போது லார்ட்ஸ் கிங் ராகுல்- இன்னொரு மகுடம்

லார்ட்ஸ் மைதான சாதனையாளர்கள் பெயர்பலகையில் ராகுல்

லார்ட்ஸ் மைதான சாதனையாளர்கள் பெயர்பலகையில் ராகுல்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சதமெடுத்து 127 நாட் அவுட் என்று இன்று 2ம் நாள் இரட்டைச் சதம் எடுப்பாரா என்று ஆவலைத் தூண்டியுள்ள சாதனை நாயகன் கே.எல்.ராகுலுக்கு இன்னொரு மகுடம் காத்திருக்கிறது.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சதமெடுத்து 127 நாட் அவுட் என்று இன்று 2ம் நாள் இரட்டைச் சதம் எடுப்பாரா என்று ஆவலைத் தூண்டியுள்ள சாதனை நாயகன் கே.எல்.ராகுலுக்கு இன்னொரு மகுடம் காத்திருக்கிறது.

    கடந்த டெஸ்ட் போட்டியில் நாட்டிங்காமில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜஸ்பிரிது பும்ரா பெயர் மைதான வரவேற்பரை பலகையில் எழுதப்பட்டது. இது ஒரு பெரிய கவுரவமாகப் பார்க்கப்படுவதாகும்.

    மெக்கா ஆஃப் கிரிக்கெட் என்று வழங்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் அடித்த சதம் பலசாதனைகளை அவருக்கு சாதகமாக்கியுள்ளது.

    அதே போல் இந்த டெஸ்ட்டில் லார்ட்சில் சதம் எடுத்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு வினு மன்காட், ரவிசாஸ்திரிக்குப் பிறகு லார்ட்ஸில் சதம் எடுத்த முதல் தொடக்க வீரர் என்ற பெருமையைத் தட்டி சென்ற ராகுல் பெயரும் லார்ட்ஸ் சாதனைப்பட்டியல் பெயர்ப்பலகையில் இடம்பெறவுள்ளது.

    லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ட்விட்டர் கைப்பிடி இது குறித்த தகவலைப் பதிவிட அதை பிசிசிஐ மறு டிவீட் செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கே.எல். ராகுல் லார்ட்ஸ் மைதானத்தில் நிகழ்த்திய சாதனைகள்:

    31 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்சில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார் கே.எல்.ராகுல். இப்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிதான் கடைசியாக லார்ட்சில் செஞ்சுரி அடித்தது.

    வினுமன்காட், ரவி சாஸ்திரிக்குப் பிறகு லார்ட்ஸில் சதம் எடுக்கும் 3வது இந்திய தொடக்க வீரர் ராகுல் ஆவார்.

    ரவிசாஸ்திரி, ராகுல் திராவிடுக்குப் பிறகு ஓவல் மற்றும் லார்ட்ஸ் இரண்டு மைதானங்களிலும் சதம் கண்டவரானார் ராகுல்.

    அதே போல் இந்த நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருமுறை 80க்கும் அதிகமான ரன்களை எடுத்த 4வது இந்திய தொடக்க வீரர் ஆவார். மற்ற வீரர்கள் சேவாக், திராவிட், முரளி விஜய்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2021-23-ம் அத்தியாயத்தில் முதல் சதம் எடுத்த இந்திய வீரர் ஆனார்.

    ஆசியாவுக்கு வெளியே அதிக சதம் எடுத்த தொடக்க வீரரில் கவாஸ்கருக்குப் பிறகு கே.எல்.ராகுல் 4 சதங்கள் எடுத்து இரண்டாவது ஆக இருக்கிறார், கவாஸ்கர் யாரும் நெருங்க முடியாத 15 அயல்நாட்டு சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: