டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கும் ஹிட்மேன்! - எம்.எஸ்.கே.பிரசாத்

ராகுல் ஒரு சிறப்பான வீரர். தற்போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். அவருக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்புகள் வழங்கப்படும்.

டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கும் ஹிட்மேன்! - எம்.எஸ்.கே.பிரசாத்
ரோஹித் சர்மா
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2019, 4:27 PM IST
  • Share this:
டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க ஆலோசித்து வருவதாக தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

கே.எல்.ராகுல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் 44, 38, 13 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.


இதனால் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவைத் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று கங்குலி மற்றும் லட்சுமணன் அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் ஓபனிங் குறித்து தேர்வுக் குழுத்தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், ராகுல் ஒரு சிறப்பான வீரர். தற்போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்.

அவருக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்புகள் வழங்கப்படும். ஒருவேளை அவரது ஆட்டம் சிறப்பாக இல்லையென்றால் தொடக்க வீரரை மாற்றி, ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க முடிவு செய்துள்ளோம். எனவே சில போட்டிகளில் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்து அவரது ஆட்டத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு ரோஹித் சர்மாவிற்கு இடமளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Also see:
First published: September 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்