ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘எதிர்காலத்தில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக கே.எல்.ராகுல் இருப்பார்’ – ஆண்டி ஃப்ளார் கருத்து

‘எதிர்காலத்தில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக கே.எல்.ராகுல் இருப்பார்’ – ஆண்டி ஃப்ளார் கருத்து

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் அறிமுகமானது. இதன் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக எதிர்காலத்தில் கே.எல். ராகுல் இருப்பார் என்று ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஆன்டி பிளவர் கூறியுள்ளார். 7 ஒருநாள், மூன்று டெஸ்ட் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல். ராகுல் செயல்பட்டுள்ளார். ரோகித் சர்மாவின் தலைமையின்கீழ் கே.எல். ராகுல் பல போட்டிகளில் துணை கேப்டனாக பொறுப்பு வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல். ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்து, 64 ரன்களை எடுத்தார். அவர் தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை இம்மாதம் திருமணம் முடிக்க உள்ளதால், அவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவரது திறமை குறித்து, அவர் தற்போது கேப்டனாக இருக்கும் ஐ.பி.எல். அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கூறியதாவது-

பேட்டிங் செய்வதில் கே.எல். ராகுல் சிறந்தவர். அவரது பேட்டிங்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அற்புதமாக இருக்கும். அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். நான் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது தான், கே.எல்.ராகுலை முதலில் பார்த்தேன். திருவனந்தபுரத்தில் இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் விளையாடிய போது கேஎல் ராகுல் எனக்கு அறிமுகமானார்.

‘உடல் தகுதியை நிரூபியுங்கள்…’ - ரவிந்திரா ஜடேஜாவுக்கு பிசிசிஐ உத்தரவு

அவர் மிகச்சிறந்த தலைமைப் பண்புகளை உடையவர். மிகவும் அமைதியாக இருப்பார். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக கே.எல். ராகுல் நிச்சயம் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் அறிமுகமானது. இதன் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வருகிறார்.

First published:

Tags: Cricket