Home /News /sports /

தென் ஆப்பிரிக்காவில் ஒயிட் வாஷ் வாங்கிய ராகுலுக்கு மீண்டும் கேப்டன்சி- என்ன நடக்கிறது?

தென் ஆப்பிரிக்காவில் ஒயிட் வாஷ் வாங்கிய ராகுலுக்கு மீண்டும் கேப்டன்சி- என்ன நடக்கிறது?

கே.எல்.ராகுல் மீண்டும் கேப்டன்

கே.எல்.ராகுல் மீண்டும் கேப்டன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 0-3 என்று ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் வாங்கிய கேப்டன் கே.எல்,ராகுல், அவருக்கே மீண்டும் கேப்டன்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தரமற்ற ஐபிஎல் 2022 தொடருக்குப் பிறகு சீரியஸ் கிரிக்கெட் எதையும் ஆடாத கேஎல்.ராகுல் ஜிம்பாப்வே தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மீண்டும் உலகக்கோப்பை ஆடுவாரா என்றெல்லாம் தெரியாத ஷிகர் தவான் வைஸ் கேப்டன். என்ன நடக்கிறது இந்திய தேர்வுக்குழுவில்?

    பெரிய வீரர்களையும் பவுலர்களையும் ஓய்வுக்கும் இங்கிலாந்தின் ஆள்பிடிப்பு கோல்பாக் டீலுக்கும் வீரர்களை இழந்து பலவீனமான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கே.எல்.ராகுல் ஒருநாள் தொடரில் கேப்டன்சி செய்து 0-3 என்று ஒயிட்வாஷ் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு மீண்டும் கேப்டன்சி வழங்கப்பட்டுள்ளது எந்த வித கிரிக்கெட் தராதரங்கள் அடிப்படையில் இல்லை என்பது தெளிவு, வர்த்தக நலன்கள், ஐபிஎல் வர்த்தக உரிமையாளர்கள், அவர்களது ஸ்பான்சர்கள் பிசிசிஐக்கு அளிக்கும் நெருக்கடிதான் இத்தகைய முடிவுக்குக் காரணம்.

    மீண்டும் ஏன் விராட் கோலி இந்த அணியில் இல்லை. அவர் 11 ரன்கள் எடுக்கத் திணறுகிறார், எனவே ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவாவது தன் பார்மை மீட்கிறாரா என்றுதானே பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 18 முதல் 22ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியிலும் ராகுல் ஆடவில்லை. முக்கியப் போட்டிகளில் ரோஹித் சர்மா போல் காயம் கீயம் என்று விலகி விடுகின்றனர் நம் சூப்பர் ஸ்டார் வீரர்கள்.

    இந்த ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தரும் காயமடைந்து விட்டார். இந்த அணியில் ஏன் ஹர்திக் பாண்டியா இல்லை. ராகுல் திவேத்தியா இல்லை, பிரிதிவி ஷா இல்லை, எத்தனை காலம்தான் வயதான ஷிகர் தவானை வைத்துக் கொண்டு ஓபி அடிக்க முடியும்? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. முதலில் கே.எல்.ராகுல் ஒரு கேப்டன்சி ஆளே அல்ல.

    அவருக்கு ஆக்ரோஷமெல்லாம் வரவே இல்லை. வெங்சர்க்கார் போன்ற ஒருவரை கேப்டனாக்கினால் சரி வருமா? அந்த வகையைச் சேர்ந்தவர்தான் ராகுல்.  ஜிம்பாப்வேயின் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில்தான் 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.
    அந்த அணியின் சிகந்தர் ரசா பெரிய பார்மில் இருக்கிறார், இவரது 2 சதங்களினால் வெல்ல முடியாத இடத்திலிருந்து ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தை 2-1 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் முகமது ஷமி ஒழிக்கப்பட்டுள்ளார். அர்ஷ்தீப் சிங் இல்லை. ஒரே ஆறுதல் தீபக் சாஹர் அணியில் இருக்கிறார். ஆனால் அவர் காயத்திலிருந்து விடுபட்டாரா என்று தெரியவில்லை.

    இந்திய அணி வருமாறு: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், தீபக் சாஹர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India, Zimbabwe

    அடுத்த செய்தி