• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணியின் கேப்டனாகிறார் கே.எல்.ராகுல் - தகவல்

இந்திய அணியின் கேப்டனாகிறார் கே.எல்.ராகுல் - தகவல்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

  • Share this:
    டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தொடர் தோல்வியை அடுத்து இந்திய அணி மீது பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    இந்திய அணி மூத்த வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்து தொடர், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை என தொடர்ச்சியாக விளையாடி வருவதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால் துணை கேப்டனாக உள்ள ரோஹித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம். ரோஹித் சர்மாவிற்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட இருப்பதால் கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் ஏற்பார்.

    Also Read : இந்திய அணி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது: சேவாக்

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நவம்பர் 17-ம் தேதி ஜெய்பூரில் தொடங்க உள்ளது. கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: