• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • KL Rahul | ஒரே சதம் பல சாதனைகள்- 31 ஆண்டுகளுக்குப் பிறகு சபாஷ் கே.எல்.ராகுல்

KL Rahul | ஒரே சதம் பல சாதனைகள்- 31 ஆண்டுகளுக்குப் பிறகு சபாஷ் கே.எல்.ராகுல்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 276/3 என்று வலுவான நிலையில் இருக்கக் காரணம் கே.எல்.ராகுலின் 127 நாட் அவுட்.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 276/3 என்று வலுவான நிலையில் இருக்கக் காரணம் கே.எல்.ராகுலின் 127 நாட் அவுட்தான்.

    முதல் டெஸ்ட் போட்டியிலும் அருமையாக ஆடினார் ஆனால் சதத்தை நழுவ விட்டார். ஆனால் நேற்று துல்லியமாக ஆடினார். அதுவும் ரோகித் அவுட் ஆன பிறகு மொயீன் அலியை சிக்ஸ் அடித்து ஆக்ரோஷம் காட்டிய ராகுல் சிலபல பிரமாதமான ட்ரைவ்களை ஆடி அசத்தினார்.

    Also Read: Indian Hockey| இந்திய ஹாக்கி எழுச்சிக்குக் காரணமான ஒடிசா கிராமம் சவுனமாரா- சைலண்ட் ஹீரோ முதல்வர் நவீன் பட்னாயக்

    மெக்கா ஆஃப் கிரிக்கெட் என்று வழங்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் அடித்த சதம் பலசாதனைகளை அவருக்கு சாதகமாக்கியுள்ளது.

    31 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்சில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார் கே.எல்.ராகுல். இப்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிதான் கடைசியாக லார்ட்சில் செஞ்சுரி அடித்தது.

    Also Read: கே.எல்.ராகுல் இப்படி ஆடி நான் பார்த்ததில்லை: புகழ்ந்து தள்ளும் ரோகித் சர்மா
     வினுமன்காட், ரவி சாஸ்திரிக்குப் பிறகு லார்ட்ஸில் சதம் எடுக்கும் 3வது இந்திய தொடக்க வீரர் ராகுல் ஆவார்.

     

    ரவிசாஸ்திரி, ராகுல் திராவிடுக்குப் பிறகு ஓவல் மற்றும் லார்ட்ஸ் இரண்டு மைதானங்களிலும் சதம் கண்டவரானார் ராகுல்.

    Also Read: கே.எல்.ராகுலை இனி அசைக்க முடியாது: புஜாரா எதிர்காலம்?- ஷுப்மன் கில் மீண்டும் வந்தால்

    அதே போல் இந்த நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருமுறை 80க்கும் அதிகமான ரன்களை எடுத்த 4வது இந்திய தொடக்க வீரர் ஆவார். மற்ற வீரர்கள் சேவாக், திராவிட், முரளி விஜய்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2021-23-ம் அத்தியாயத்தில் முதல் சதம் எடுத்த இந்திய வீரர் ஆனார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆசியாவுக்கு வெளியே அதிக சதம் எடுத்த தொடக்க வீரரில் கவாஸ்கருக்குப் பிறகு கே.எல்.ராகுல் 4 சதங்கள் எடுத்து இரண்டாவது ஆக இருக்கிறார், கவாஸ்கர் யாரும் நெருங்க முடியாத 15 அயல்நாட்டு சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: