Home /News /sports /

காயமடைந்த கே.எல்.ராகுல் ஆஸ்திரேலியா தொடரிலிருந்து விலகல்; இங்கிலாந்து தொடருக்கும் சந்தேகம்

காயமடைந்த கே.எல்.ராகுல் ஆஸ்திரேலியா தொடரிலிருந்து விலகல்; இங்கிலாந்து தொடருக்கும் சந்தேகம்

 கே.எல்.ராகுல் விலகல்

கே.எல்.ராகுல் விலகல்

சனிக்கிழமையன்று மெல்போர்னில் நடந்த இந்திய அணிப் பயிற்சியின் போது இடது மணிக்கட்டில் கே.எல்.ராகுலுக்கு காயம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு ஆஸ்திரேலிய தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்காமல் அவரை நோகடித்த இந்திய அணி நிர்வாகம் சிட்னியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கக் காத்திருந்தது.

    ஆனால், சனிக்கிழமையன்று மெல்போர்னில் நடந்த இந்திய அணிப் பயிற்சியின் போது இடது மணிக்கட்டில் காயமடைந்தார் கே.எல்.ராகுல்.

    இதனையடுத்து தொடரிலிருந்து விலகிய ராகுல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குத் திரும்பவுள்ளார். இவர் காயத்திலிருந்து மீள 3 வாரங்கள் ஆகும். எனவே இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்பது கடினம் என்று தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

    ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பிரிதிவி ஷா, சைனி உள்ளிட்ட 5 வீரர்கள் ஆஸ்திரேலிய கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளதால் அவர்கள் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறித்து இன்னும் சந்தேகங்கள் தீரவில்லை என்ற நிலையில் கே.எல்.ராகுலின் நிலைமையும் இப்படியாகியுள்ளது.

    சிட்னியில்தான் ராகுல் தன் முதல் சதத்தை எடுத்தார். 2014-15 தொடரில் அவர் 110 ரன்களை சிட்னியில்தான் எடுத்தார். ஆனால் 2018-19 தொடரில் கடுமையாகச் சொதப்பினார் ராகுல்.

    மேலும் சிட்னி டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ராகுல் களமிறங்குவதாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்தத் தொடரில் மயங்க் அகர்வாலின் பேட்டிங் சொதப்பலாகி வருகிறது, பேட்டிங்கில் அவருக்கு கையும் நகரவில்லை காலும் நகரவில்லை, அதனால் ராகுலை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

    இந்நிலையில் தன் முதல் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அவருக்கு காயம் ஏற்பட்டது அவரது துரதிர்ஷ்டமே.

     
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs Australia, Kl rahul, Sydney

    அடுத்த செய்தி