Home /News /sports /

இங்கிலாந்து தொடருக்கு கே.எல்.ராகுல் சந்தேகம்- ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு

இங்கிலாந்து தொடருக்கு கே.எல்.ராகுல் சந்தேகம்- ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு

ராகுல் ரோஹித் கோலி

ராகுல் ரோஹித் கோலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கே.எல். ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கே.எல். ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், கேஎல் ராகுல் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் மும்பையில் கூடுகின்றனர். நள்ளிரவில் இங்கிலாந்து புறப்படுகின்றனர். கே.எல். ராகுல் அந்த அணியுடன் பயணிக்கவில்லை. இந்த வார இறுதியில் உடற்தகுதித் தேர்வில் ராகுல் பங்கேற்க உள்ளார். எனினும், காயத்திலிருந்து மீள அவர் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள உள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து கே.எல்.ராகுல் இடத்தில் ரோஹித் சர்மாவுடன் டெஸ்ட்டில் ஷுப்மன் கில் தொடக்கத்தில் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனையடுத்து ஷ்ரேயஸ் அய்யர், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரும் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    செம பார்மில் இருக்கும் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி வலுவான வீரர்களை களமிறக்க வேண்டும். ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷமி, பும்ரா, சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா என்று அமைய வாய்ப்புள்ளது.

    24ஆம் தேதி, கவுண்டி அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. அடுத்து ஜூலை 1 முதல் 5ஆம் தேதிவரை, இங்கிலாந்தை எதிர்த்து, 2021 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா காரணமாக ஒரு போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.இந்தியா தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

    இந்த டெஸ்ட்டில் வென்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து நிச்சயம், அதுவும் புதிய தலைமை பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய பயிற்சியாளர் மெக்கல்லம் வழிகாட்டுதலில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் தங்கள் பார்முக்குத் திரும்பி பெரிய இன்னிங்ஸை ஆடினால் இங்கிலாந்தை இந்தியா அடக்க முடியும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Kl rahul, Shubman Gill

    அடுத்த செய்தி