ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெற மாட்டார்’ - முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு

‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெற மாட்டார்’ - முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து தனது திறமையை இஷான் கிஷன் நிரூபித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆடும் லெவனில் கே.எல். ராகுல் இடம்பெற மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருந்துவரும் கே.எல். ராகுலுக்கு துணை கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேச சுற்றுப் பயணத்தின் போது, இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரில் கே.எல். ராகுல் துணை கேப்டனாக பொறுப்பிலிருந்தார்.

2ஆம் ஆட்டத்தில் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேற, கடைசி போட்டியில் கே.எல். ராகுல் அணிக்கு தலைமை வகித்தார். இருப்பினும் அவரது பேட்டிங் பர்ஃபாமென்ஸ் கடந்த சில போட்டிகளில் குறிப்பிடும்படி அமையவில்லை. இன்னொரு பக்கம் இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருநாள் போட்டியின்போது 4-வது வீரராக கே.எல். ராகுல் விளையாடுவார். இந்த இடத்தில் அவரை விடவும் சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவர் என்று பேசப்படுகிறது.

இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆடும் லெவனில் கே.எல். ராகுல் இடம்பெற மாட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து தனது திறமையை இஷான் கிஷன் நிரூபித்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் அனைவரும், தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளனர்.

இதனால் ஆடும் லெவனில் இடம் பெற கே.எல். ராகுல் மிக கடினமாக போராட வேண்டி இருக்கும். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடும் லெவனில் கே.எல். ராகுல் இடம்பெற மாட்டார் என்றே நினைக்கிறேன்.

‘அழகான காரை வைத்திருக்கலாம்… அதைவிட உங்கள் உயிர் முக்கியம்’ – ரிஷப் பந்திற்கு ஏற்பட்ட விபத்து குறித்து கபில் தேவ் உருக்கம்…

ஹர்திக் பாண்ட்யாவிற்கு 20 ஓவர் அணிக்கான கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதை நல்ல விஷயமாக பார்க்கிறேன்.

சதம் அடித்த டெவோன் கான்வே… பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி ஆதிக்கம்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி, சாம்பியன் பட்டம் பெற வைத்தார். தேவை ஏற்படும் போது நிச்சயமாக ரோஹித் சர்மாவின் இடத்தை பாண்ட்யா நிரப்புவார். இவ்வாறு கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket