Home /News /sports /

கே.எல்.ராகுலுக்கு கொரோனா பாசிட்டிவ்

கே.எல்.ராகுலுக்கு கொரோனா பாசிட்டிவ்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பிய கே.எல்.ராகுல் பெங்களூருவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவர் மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பிய கே.எல்.ராகுல் பெங்களூருவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவர் மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது, இது தரூபாவில் ஜூலை 29ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மறு பிரவேசத்துக்காக ஆவலுடன் காத்திருக்கும் கே.எல்.ராகுலுக்கு கோவிட்-19 பாசிட்டிப் என்ற செய்தியை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்தார்.

    ஜெர்மனியில் சமீபத்தில் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராகுல் இன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தொடங்கும் ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டார்.

    அதே போல் காமன்வெல்த் போட்டிகளுக்குச் செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஒருவருக்கும் கோவிட் என்று கங்குலி தெரிவித்தார், ஆனால் வீராங்கனை பெயர் தெரியவில்லை.

    ராகுல் ஐபிஎல் 2022க்குப் பிறகே சீரியஸ் கிரிக்கெட் எதிலும் பங்கேற்க முடியவில்லை. முழு உடல்தகுதிக்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்த ராகுல் வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இது குறித்த இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் கே.எல்.ராகுல்.



     




    View this post on Instagram





     

    A post shared by KL Rahul👑 (@klrahul)






    ஐபிஎல் 2022 தொடரில் 616 ரன்களை 51.33 என்ற சராசரியில் விளாசினார் ராகுல். ஸ்ட்ரைக் ரேட் 135.68.அறிமுக சீசனிலேயே தன் தலைமையில் லக்னோ அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு இட்டுச் சென்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Rahul

    அடுத்த செய்தி