Home /News /sports /

11 வயது இளம் கிரிக்கெட் வீரருக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சை- ரு.31 லட்சம் நன்கொடை அளித்த கே.எல்.ராகுல்

11 வயது இளம் கிரிக்கெட் வீரருக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சை- ரு.31 லட்சம் நன்கொடை அளித்த கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் அவசர எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (பிஎம்டி) தேவைப்படும் 11 வயது வளரும் கிரிக்கெட் வீரரைக் காப்பாற்ற வந்துள்ளார், அரிய இரத்தக் கோளாறுக்கான சிகிச்சைக்காக ₹31 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

மேலும் படிக்கவும் ...

    டிசம்பரில், வரத் நலவாடேவின் தந்தை சச்சின், இவர் ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட் மற்றும் தாய் ஸ்வப்னா ஜா ஆகியோர், தங்கள் மகனின் சிகிச்சைக்காகத் தேவையான ₹35 லட்சத்தைத் திரட்டுவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

    வரத் பற்றி தெரிந்தவுடன் ராகுல் குழுவினர் பிரச்சாரத்துடன் தொடர்புடைய அமைப்பினருடன் தொடர்பு கொண்டனர்.

    கடந்த செப்டம்பரில் இருந்து, ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவன், அபூர்வ ரத்தக் கோளாறான அப்லாஸ்டிக் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டு, மும்பையின் ஜஸ்லோக் மருத்துவமனையில் ரத்தக்கசிவு நிபுணர்களின் கண்காணிப்பில் இருந்தான்.

    வரத்தின் பிளேட்லெட்களின் அளவுகள் மிகவும் குறைவாக இருந்ததால், அவரது நோயெதிர்ப்பு அமைப்பு நோய்த்தொற்றுகளுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. சாதாரண காய்ச்சல் கூட குணமாக பல மாதங்கள் ஆகும். எனவே ஒரு BMT மட்டுமே வரத்தின் நிலைக்கு நிரந்தர சிகிச்சையாக இருக்கும் என்று தெரிந்தது.

    இப்போது ராகுல் அளித்த இன்ந்த உதவியினான் வரத் அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி வருகிறான், இது தொடர்பாக ராகுல் கூறும்போது, “வரத்தின் உடல்நிலை குறித்து நான் அறிந்ததும், எனது குழுவினர் கிவ்இந்தியாவுடன் தொடர்பு கொண்டதால், அவருக்கு எங்களால் முடிந்த உதவியை செய்ய முடிந்தது.

    அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அவர் நன்றாக இருக்கிறார். வரத் விரைவில் மீண்டும் கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்து தனது கனவுகளை அடையச் செல்வார் என்று நம்புகிறேன். எனது பங்களிப்பு மேலும் மேலும் மக்கள் முன்வரவும் அவர்களுக்கு உதவவும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார் கே.எல்.ராகுல்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Kl rahul

    அடுத்த செய்தி