இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், இந்தி நடிகர் மகளுடன் நாளை திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் முன்னனி கிரிக்கெட் வீரராக வலம் வரும் கே.எல்.ராகுல் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் நாளை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை என்றாலும் திருமணம் குறித்த தகவல்கள் செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
இதற்காக கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி திருமணத்திற்கான மெஹந்தி விழா மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் இன்று நடந்தது. மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் லோகேஷ் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நாளை நடக்கிறது. இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சல்மான்கான், அக்ஷய்குமார், கிரிக்கெட் வீரர்கள் டோனி, விராட் கோலி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு பாலிவுட், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்காக மும்பையில் பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kl rahul, Wedding Season