முதல் போட்டியில் தன் வாயால் கெட்டார் கோலி, 2வது போட்டியில் இஷான் கிஷனின் அதிரடியினால் தன் பழைய பாணிக்குத் திரும்பினார்: மைக் ஆதர்ட்டன்

ரோஹித் ஷர்மா, வீரட் கோலி.

பொதுவாக கோலியிடம் நிறைய ஷாட்கள் கைவசம் இல்லை. அதனால் அவர் இப்போது வரும் இளைஞர்களைப் பார்த்து ஆக்ரோஷம் என்றெல்லாம் சூடு போட்டுக் கொள்ளக் கூடாது அவருக்கென்று ஒரு பாணி உள்ளது அது 3 வடிவங்களிலும் அவருக்கு இதுவரை கைகொடுத்து வருகிறது.

  • Share this:
    2-வது டி20 போட்டியில் அறிமுக அதிரடி வீரர் இஷான் கிஷன் ஒரு முனையில் அடித்து நொறுக்கியது விராட் கோலிக்கு சுதந்திரமாக ரிலாக்ஸாக ஆட கால அவகாசத்தை வழங்கியது, அழுத்த்தையும் குறைத்தது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமான மைக் ஆத்தர்டன் தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி அகமதாபாத் டெஸ்ட்டில் கடைசியாக டக் அவுட் ஆனார், பிறகு முதல் போட்டியில், ‘ஆக்ரோஷமாக ஆடப்போகிறோம்’ இனி பட்டையைக் கிளப்புவோம், தூள்பறக்கு என்றெல்லாம் தன் பேசியிருந்தார். ஆனால் கடைசியில் ரஷீத் பந்தை ஒதுங்கிக் கொண்டு தூக்கி அடிக்கிறேன் என்று மிட் ஆஃபில் கொடியேற்றி அவுட் ஆனார்.

    இதனையடுத்து விராட் கோலி பேட்டிங் அவ்வளவுதான் என்று பலரும் நினைக்க, 2வது போட்டியில் அவர் இஷான் கிஷனுடன் சேர்ந்து 94 ரன்கள் கூட்டணி அமைத்ததோடு, தன் அடிப்படை நேர்மறையான பேட்டிங் உத்திக்குத் திரும்பி பிறகு அடித்து ஆடும் தன் பழைய பாணிக்க்த் திரும்பி 49 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

    பொதுவாக கோலியிடம் நிறைய ஷாட்கள் கைவசம் இல்லை. அதனால் அவர் இப்போது வரும் இளைஞர்களைப் பார்த்து ஆக்ரோஷம் என்றெல்லாம் சூடு போட்டுக் கொள்ளக் கூடாது அவருக்கென்று ஒரு பாணி உள்ளது அது 3 வடிவங்களிலும் அவருக்கு இதுவரை கைகொடுத்து வருகிறது, திடீரென ரிஷப் பந்த், நேற்று இஷான் கிஷன் போன்றோரின் ஆக்ரோஷ வழிமுறைகளுடன் போட்டியிடக் கூடாது.

    இந்நிலையில் நேற்று இஷான் கிஷனின் அதிரடி பேட்டிங் கோலி மீதான சுமையைக் குறைத்ததால் அவர் சுதந்திரமாக ஆடினார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் ஆத்தர்டன் கூறினார்.

    “முதல் போட்டியில் கொஞ்சம் விராட் கோலிக்கு அழுத்தம் இருந்தது. ஏனெனில் செய்தியாளர்களிடம் அவர் என்ன கூறினார், இனி ஆக்ரோஷ கிரிக்கெட்டைத்தான் ஆடுவோம் என்று முழங்கினார்.

    இந்திய பேட்டிங் வரிசையில் ஆக்ரோஷ வீரர்கள் இருப்பதால் கோலிக்கு ஒரு அழுத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து பட்டையைக் கிளப்புவோம் ஆக்ரோஷம்தான், இத்தனை நாள் பேசிக்கொண்டிருந்தேன் இனி செய்வேன் போன்ற வார்த்தைகளில் கோலி பேசினார். ஆனால் அது அவருக்கான தேநீர் கோப்பை அல்ல, அது அவரது ஆட்டம் அல்ல என்பதை உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    கோலி ஒரு உயர்நிலை ஆட்டக்காரர். ரன்களை விரைவாக எடுப்பார், ஆனால் ரிஷப் பந்த் போலவோ இஷான் கிஷன் போலவோ அல்ல. எனவே இவர்கள் இறங்கி அவர்களது இயல்பான ஆட்டத்தை ஆடி ரன்கள் குவிக்க முடியும் போது கோலி தன் இயல்பான ஆட்டத்தை ஆட முடிகிறது.

    முதல் போட்டியில் ஒதுங்கிக் கொண்டு தூக்கி அடிக்க நினைத்தார் அது அவரது ஆட்டம் அல்ல. அவருக்கு நேர்மறையான உத்தியுடன் கூடிய ஆட்டம்தான் சவுகரியமானது. மரபான ஆட்டம்தான் அவருக்கு ஒத்துவரும், அவர் வேகமாக ரன்கள் எடுத்தாலும் அது அந்த வழியில்தான்.

    எனவே என்னைப் பொறுத்தவரையில் நேற்று கோலி ஆடியதுதான் கோலிக்கே உரித்தான ஆட்டப்பாணி, இதிலிருந்து அவர் இளைஞர்களைப் பார்த்து சூடுபோட்டுக் கொள்ளக் கூடாது” என்றார்.
    Published by:Muthukumar
    First published: