Home /News /sports /

நான் வழக்கமான விக்கெட் கீப்பர் அல்ல, இலக்கணம் மீறிய விக்கெட் கீப்பர்: எம்.எஸ்.தோனி

நான் வழக்கமான விக்கெட் கீப்பர் அல்ல, இலக்கணம் மீறிய விக்கெட் கீப்பர்: எம்.எஸ்.தோனி

எம்.எஸ். தோனி

எம்.எஸ். தோனி

காபிபுக் ஸ்டைலை மறந்து விடு என்றார். உன் ஸ்டைலிலேயே பயிற்சி எடுப்போம் என்றார். கடைசியில் என்ன விக்கெட் கீப்பர் கேட்சை விடக்கூடாது, ஸ்டம்பிங்கை தவற விடக்கூடாது என்பதுதானே.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஒரு விளம்பர நிகழ்வில் தன் விக்கெட் கீப்பிங் பற்றி மனம் திறந்த எம்.எஸ். தோனி, முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மோரே தனது வழக்கத்திற்கு மாறான விக்கெட் கீப்பிங் டெக்னிக்கை  வைத்துக் கொள்ள எப்படி உதவினார் என்பதையும், அது எப்படி சிறந்த விக்கெட் கீப்பராக உருவாக உதவியது என்பதையும் பற்றி மனம் திறந்தார்.

வெற்றிகரமான விக்கெட் கீப்பராக தோனி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தது குறிப்பிடத்தக்கது. தோனியின் விக்கெட் கீப்பிங், ஒரு விக்கெட் கீப்பருக்கான இலக்கணங்களுடன் கூடியதல்ல, அவரது வழக்கத்துக்கு மாறான உத்தியை கிரண் மோரே தக்கவைத்துள்ளார். இலக்கண மீறல் விக்கெட் கீப்பிங் செய்தும் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 829 வீரர்களை அவுட் செய்துள்ளார். அதில் 195 ஸ்டம்பிங் என்பது ஆல் டைம் கிரேட் சாதனை ஆகும்.

எம்.எஸ். தோனியின் ‘பிளாஷ்’ ஸ்டம்பிங்க் ஒரு பேரழகு. தோனியை ஸ்பெஷல் விக்கெட் கீப்பராக்கியது எது? நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி மனம் திறந்து கூறியது இதோ: 

கிரண் மோரே இல்லை எனில் தோனி இல்லை: “நான் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் தொடங்கினேன். டென்னிஸ் பந்தில் விக்கெட் கீப்பிங் செய்யும் போது கையை இறுக்க வைத்துக் கொள்ளக்கூடாது சாஃப்டாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுக்க வைத்தால் பந்து கையிலிருந்து எகிறிவிடும். அங்கிருந்துதான் நாங்கள் தொடங்கினோம்.  கிரிக்கெட் பந்தில் விக்கெட் கீப்பிங் செய்யத் தொடங்கிய போது நிறைய உதவிகள் எனக்குக் கிடைத்தது.

குறிப்பாக கிரண் மோரே செலக்டராக இருந்த போது அணியுடன் தான் அவர் இருப்பார். என் கீப்பிங்கில் அவர்தான் எனக்கு நிறைய உதவினார். விக்கெட் கீப்பிங் பயிற்சியில் அவர்தான் உதவினார்.  அவரிடம் எனக்குப் பிடித்தது என்னவெனில் என் வழக்கத்துக்கு மாறான விக்கெட் கீப்பிங் இலக்கணத்தை மீறிய என் ஸ்டைலை அங்கீகரித்தது அதற்கேற்ப ஆலோசனைகளை வழங்கியது தான். தனித்துவமான என் ஸ்டைலை அவர் அடையாளம் கண்டார்.

இதையும் வாசிக்க: அதிக சிக்சர்கள்: மார்டின் கப்தில் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா

கிளவ் ரப்பரால் ஆனது, உள்புறமும் ரப்பர் பிறகு காட்டன் இருக்கும். எனவே அது ஏற்கெனவே மிகவும் சாஃப்ட் தான். எனவே பந்து வரும்போது நான் அதைப் பெறுவதில்லை மாறாக அதன் வழியில் அது போனாலும் நான் எட்டிப்பறிப்பேன். அடிக்கடி பந்தைத் தட்டிப்பறித்தல்தான் என் விக்கெட் கீப்பிங் ஸ்டைல்.  கிரண் மோரே எனக்கு சுதந்திரம் கொடுத்தார், சரி காபிபுக் ஸ்டைலை மறந்து விடு என்றார். உன் ஸ்டைலிலேயே பயிற்சி எடுப்போம் என்றார். கடைசியில் என்ன விக்கெட் கீப்பர் கேட்சை விடக்கூடாது, ஸ்டம்பிங்கை தவற விடக்கூடாது என்பதுதானே.   திறமையில் நம்பிக்கை வைத்து அதே பாணியை கடைப்பிடித்தால் காலப்போக்கில் பரிசோதனை முயற்சிகளையும் விக்கெட் கீப்பிங்கில் செய்யலாம். அணிக்கு உதவக்கூடிய ஒன்றை புதிதாகச் செய்யலாம்” என்றார் எம்.எஸ்.தோனி.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Indian cricket team, Mahendra singh dhoni, MS Dhoni

அடுத்த செய்தி