• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் திடீர் விலகல்... பஞ்சாப் அணிக்கு புதிய சிக்கல்!

ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் திடீர் விலகல்... பஞ்சாப் அணிக்கு புதிய சிக்கல்!

பஞ்சாப் அணியில் வருண் சக்ரவர்த்தி. (IPL)

பஞ்சாப் அணியில் வருண் சக்ரவர்த்தி. (IPL)

#KXIP's Rs.8.4 crore signing #VarunChakravarthy ruled out of entire #IPL2019 | எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடப்பு ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விளையாடி வந்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் வருண் சக்கரவர்த்தியின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதை விட 42 மடங்கு அதிகமாக ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

    நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர், அந்தப் போட்டியில் 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.

    Varun Chakravarthy, வருண் சக்ரவர்த்தி
    வருண் சக்ரவர்த்தி. (TNPL)


    அதன்பிறகு, சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து வருண் விலகினார்.

    இந்நிலையில், காயத்தால் அவதிப்பட்ட வருண், குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டுவராததால் எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகியதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர், அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமலேயே விலகியுள்ளார்.

    தற்போது, பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் ஸ்மித்... ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான்...?

    தோனி பங்கேற்பது சந்தேகம்... டெல்லியை வீழ்த்துமா சென்னை?

    ஐ.பி.எல் போட்டியில் விளையாட பஞ்சாப் அணிக்கு தடையா? வெளியானது பரபரப்பு தகவல்!

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: