இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு! முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பினர்

கனடா டி20 போட்டிகளில் கெய்ல் விளையாடி வருவதால் இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளிலும் அவர் இடம்பெறவில்லை.

Vijay R | news18
Updated: July 23, 2019, 2:05 PM IST
இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு! முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பினர்
சுனில் நரேன்
Vijay R | news18
Updated: July 23, 2019, 2:05 PM IST
இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டி20 போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விளையாடாமல் இருந்த முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இந்திய அணி, ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்ல உள்ள இந்திய அணி கடந்த ஞாயிற்று கிழமை அறிவிக்கப்பட்டனர்.


ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சாஹர், குர்ணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சவால் கொடுக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் பொல்லார்டு, சுழற் பந்துவீச்சாளர் சுனில் நரேன் அணிக்கு திரும்பி உள்ளனர். அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அணியை தேர்ந்தெடுத்துள்ளனர். கனடா டி20 போட்டிகளில் கெய்ல் விளையாடி வருவதால் இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளிலும் அவர் இடம்பெறவில்லை.

Loading...

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விபரம்: பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்பல், எவின் லெவிஸ், ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்டு, ரோவ்மன் பாவெல், கீமா பால், சுனில் நரேன், காட்ரல், ஓஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஆண்ட்ரே ரசல், காரி பியர்ஸ்

Also Watch

First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...