டி-20 போட்டியில் கெய்லை துரத்தும் பொல்லார்டு!

#KieronPollard reaches #iconiclandmark in T20 cricket | கேப்டனாக களமிறங்கிய பொல்லார்டு, 31 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார்.

news18
Updated: April 11, 2019, 4:22 PM IST
டி-20 போட்டியில் கெய்லை துரத்தும் பொல்லார்டு!
அதிரடி காட்டிய பொல்லார்டு. (BCCI)
news18
Updated: April 11, 2019, 4:22 PM IST
டி-20 கிரிக்கெட் அரங்கில் மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 24-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி கே.எல்.ராகுல் (100). கிறிஸ் கெய்ல் (63) ஆகியோரின் அதிரடியால் 197 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி, பொல்லார்டின் (83) ருத்ரதாண்டவத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.


mumbai indians, IPL
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி. (BCCI)


இந்தப் போட்டியில், கேப்டனாக களமிறங்கிய பொல்லார்டு, 31 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். மொத்தம் 10 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

இதன்மூலம், டி-20 கிரிக்கெட் அரங்கில் 600 சிக்ஸர்கள் விளாசியவர் என்ற பெருமையை பொல்லார்டு பெற்றார். அவர்,வெஸ்ட் இண்டீஸ் அணியை தவிர்த்து, உலகம் முழுவதும் 15 டி-20 அணிகளுக்கு விளையாடியுள்ளார்.

Loading...

Kieron Pollard, MI, IPL
டி-20 போட்டிகளில் பொல்லார்டு 602 சிக்ஸர்கள் அடித்துள்ளார். (BCCI)


டி-20 போட்டிகளில் 925 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் இருக்கிறார். பொல்லார்டு 602 சிக்ஸர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். 485 சிக்ஸர்கள் அடித்து நியூசிலாந்தின் மெக்கல்லம் 3-வது இடத்தில் இருக்கிறார்.

VIDEO: ஹர்திக், பொல்லார்டு உடன் மோதிய பஞ்சாப் வீரர்!

முக்கியமான சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா!

ஐ.பி.எல் லீக் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...