பொல்லார்டு உயிரிழந்ததாக யூடியூபில் வெளியான வீடியோ... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

பொல்லார்டு

பொல்லார்டு கார் விபத்தில் உயிரிழந்து விட்டதாக யூடியூபில் வீடியோக்கள் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

 • Share this:
  மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டரான பொல்லார்டு கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக யூடியூபில் வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் பொல்லார்டு. ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் பொல்லார்டுக்கு இந்தியா உட்பட பல நாடுகளில் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

  இந்நிலையில் பொல்லார்டு கார் விபத்தில் உயிரிழந்து விட்டதாக யூடியூபில் வீடியோக்கள் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பெரும் பரபரப்பை கிளம்பிய இந்த வீடியோவால் பீதியடைந்த ரசிகர்களுக்கு இது வதந்தி என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் நிம்மதியடைந்தனர்.

  பொல்லார்டு தற்போது அபுதாபயில் நடைபெறும் டி10 தொடரில் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல் 2021 ஏலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு தக்கவைக்கப்பட்டு கொண்டார் என்பது குறிப்படதக்கது.

   
  Published by:Vijay R
  First published: