உலகக்கோப்பை : காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

உலகக்கோப்பை :  காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
ICC World Cup 2019
  • News18
  • Last Updated: July 7, 2019, 8:47 PM IST
  • Share this:
உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முன்னேறி உள்ளன.

முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் வரும் 9ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் ஜூலை 11ம் தேதி மோதுகின்றன.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியிலிருந்து உஸ்மான் க்வாஜா விலகி உள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி லீக் போட்டியின் போது தொடையில்  காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அடுத்த 3 அல்லது 4 வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.




இதை தொடர்ந்து உலகக் கோப்பை தொடரின் அடுத்து வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என அறவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இடது கை ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான மேத்யூவ் வேட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேப் போன்று ஆஸ்திரேலியா அணியின் மற்றொரு ஆல்-ரவுண்டரான மார்கஸ் ஸ்டோனிஸ் தென்னாப்பிரிக்கா போட்டியின் போது காயமடைந்துள்ளார். அவரது சிகிச்சை முடிவுகள் நாளை தெரியவரும் என்பதால் அவரும் தொடரில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மார்கஸ் ஸ்டோனிஸ் காயம் காரணமாக விலகியனால் அவருக்கு பதிலாக பீட்டர் ஹண்ட்ஸ்காம்ப் (Peter Handscomb) பங்கேற்பார். அவரை தயாராக இருக்கும்படி ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Watch

First published: July 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading