ரீ என்ட்ரிக்கு தயாராகும் ஸ்ரீசாந்த் - கேரள ரஞ்சி அணியில் சேர்க்க முடிவு
ரீ என்ட்ரிக்கு தயாராகும் ஸ்ரீசாந்த் - கேரள ரஞ்சி அணியில் சேர்க்க முடிவு
ஸ்ரீசாந்த் (கோப்பு படம்)
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தின் தண்டனை காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருவதால் கேரள ரஞ்சி அணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி 2007 ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்துவதற்கு முக்கிய காரணம், இறுதி ஆட்டத்தின் கடைசி பந்தில் ஸ்ரீசாந்த் பிடித்த கேட்ச் என்பதை எவராலும் மறந்துவிட முடியாது.
ஐ.பி.எல் போட்டிகளில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதால் 2013ம் ஆண்டு ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்களுக்கு பிசிசிஐ வாழ்நாள் தடைவிதித்தது. பல்வேறு கட்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு ஸ்ரீசாந்த் மீதான தடை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் மீதான தடை வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஸ்ரீசாந்த் மீதான தடை காலம் முடிவடைந்த பிறகு அவர் உடல் தகுதியை நிரூபித்தால், கேரள ரஞ்சி அணியில் இடமளிக்கப்படும் என அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
ஸ்ரீசாந்த் தனது உடல் தகுதியை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இட்மபிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார். லாக்டவுண் காலத்தில் வென்று தனது உடல் தகுதியை நிரூபிப்பாரா? என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.