முகப்பு /செய்தி /விளையாட்டு / Video: ஏர்போர்ட்டில் ‘பிரேக் டான்ஸ்’ ஆடிய கேதர் ஜாதவ்!

Video: ஏர்போர்ட்டில் ‘பிரேக் டான்ஸ்’ ஆடிய கேதர் ஜாதவ்!

‘பிரேக் டான்ஸ்’ ஆடிய கேதர் ஜாதவ். (Video Grab)

‘பிரேக் டான்ஸ்’ ஆடிய கேதர் ஜாதவ். (Video Grab)

#KedarJadhav shows off dance moves at airport | இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 2-வது போட்டி அடிலெய்டில் நாளை மறுநாள் (ஜன.15) நடைபெற உள்ளது. #AUSvIND

  • Last Updated :

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ், சிட்னி ஏர்போர்ட்டில் திடீரென ‘பிரேக் டான்ஸ்’ ஆடியதால் பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தது.

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக, ரோகித் சர்மா 133 ரன்களும், தோனி 51 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர்.

India Vs Australia, இந்தியா Vs ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. (ICC)

இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான 2-வது போட்டி அடிலெய்டில் நாளை மறுநாள் (ஜன.15) நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் அடிலெய்ட் புறப்பட்டனர்.

சிட்னியில், விமானத்துக்காக காத்திருந்தபோது, அங்கிருந்த உணவு விடுதியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ், திடீரென ‘பிரேக் டான்ஸ்’ ஆடினார். இதனைப் பார்த்த பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.




 




View this post on Instagram




 

Airport special 🕺🕺- courtesy @kedarjadhavofficial 😅😅 #TeamIndia


A post shared by Team India (@indiancricketteam) on



கேதர் ஜாதவ் நடனம் ஆடிய வீடியோவை பிசிசிஐ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு: ஸ்பான்சரை பறிகொடுத்த ஹர்திக் பாண்டியா!

Also Watch...

top videos

    First published:

    Tags: India vs Australia, Kedar Jadhav