• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இலங்கை வீரரின் கழுத்தை பதம் பார்த்த பந்து!

இலங்கை வீரரின் கழுத்தை பதம் பார்த்த பந்து!

காயமடைந்த கருணாரத்னே

காயமடைந்த கருணாரத்னே

பந்து தாக்கியதில் காயமடைந்த இலங்கை வீரர் கருணாரத்னே எவ்வித பாதிப்புமின்றி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது, கம்மின்ஸ் வீசிய பந்து தாக்கியதில் இலங்கை வீரர் கருணாரத்னே மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

    இலங்கை-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேயாலிவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கான்பரா நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் கருணாரத்னே, திரிமனே ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஆட்டத்தின் 30.4 ஓவரில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்து கருணாரத்னேவின் கழுத்தை பதம் பார்த்தது. மருத்துவக்குழு உடனே அழைக்கப்பட்டு வலியால் துடித்த கருணாரத்னேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மைதானத்திலிருந்து ஸ்டெர்ச்சரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



    தற்போது அவர் எந்த பாதிப்புமின்றி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.



    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து 411 ரன்கள் பின் தங்கியுள்ளது

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: